சென்னை வெள்ளநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு.. வருகிறது புது திட்டம்.. குட்நியூஸ் சொன்ன ஸ்டாலின்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை நகரில் வெள்ள நீர் சூழாத வகையில் பெருநகர வெள்ள நீர் குழுமம் அமைத்தல், இயற்கை வேளாண்மை, நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா நோய் தொற்று பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து உறுதி செய்தல் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கை சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ் சாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் மேலும் 1,985 பேருக்கு கொரோனா.. சென்னை ஆறுதல்.. அச்சுறுத்தும் கொங்கு மண்டலம்!தமிழ்நாட்டில் மேலும் 1,985 பேருக்கு கொரோனா.. சென்னை ஆறுதல்.. அச்சுறுத்தும் கொங்கு மண்டலம்!

எம்.எஸ்.சுவாமிநாதன்

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் 32-ம் ஆண்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை எம்.எஸ். சுவாமிநாதன் 96-வது பிறந்தநாள், அவரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க நிச்சயம் நான் வருவேன். எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிவையும், ஆற்றலையும் போற்றும் அரசாக தி.மு.க எப்போது இருந்துள்ளது

தமிழ் வேளாண் விஞ்ஞானி

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு உதவி செய்தால் அது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு பயன்படும் என்கிற தொலைநோக்கோடு சிந்தித்து இந்த நிறுவனம் வளர முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த இடத்தை அளித்துள்ளார். தமிழ் வேளாண் விஞ்ஞானி என்பதற்கு எடுத்துக்காட்டாக எம்.எஸ்.சாமிநாதன், குறிஞ்சி முல்லை மருதம் என இந்த இடங்களை பிரித்துள்ளார்.

பட்ஜெட்டில் முக்கியத்துவம்

வருகிற 13-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக 14-ம் தேதி வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம். இயற்கை வேளாண்மை தனி கவனம், உழவர் சந்தையை புதுபித்தல், கிராம சந்தைகள் அமைக்க நடவடிக்கைகள், நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய திட்டம், சென்னை நகரில் வெள்ள நீர் சூழாத வகையில், பெருநகர வெள்ள நீர் குழுமம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு ஆகியவற்றிற்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பசி பிணி போக்குதல்

வரப்பு உயர நீர் உயரும் என்ற தமிழ் நெறியை முழுமையாக கடை பிடித்து இந்த ஆட்சி நடந்து வருகிறது. பசி பிணியை போக்குவதை நோக்கமாக கொண்டு அரசு செயலப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம் மாறிவருது தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகளவில் உள்ளன. இது மானுடத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், இதற்கான ஆலோசனையை சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
Chief Minister MK Stalin has said that the budget will focus on setting up a metropolitan flood water board in Chennai to prevent flooding, natural agriculture and regulating groundwater use

Source: https://tamil.oneindia.com/news/chennai/tn-cm-mk-stalin-has-said-that-a-new-project-will-be-introduced-in-chennai-to-prevent-floods-429215.html