தமிழ்நாட்டில் மேலும் 1,985 பேருக்கு கொரோனா.. சென்னை ஆறுதல்.. அச்சுறுத்தும் கொங்கு மண்டலம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. சென்னையிலும் 200-க்கும் மேல் சென்ற கொரோனா குறைந்துள்ளது. ஆனால் கோவையில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் 2000ஐ நெருங்கும் கொரோனா.. 20 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்புதமிழ்நாட்டில் மீண்டும் 2000ஐ நெருங்கும் கொரோனா.. 20 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு

சற்று குறைந்த கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று கொரோனா சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு எவ்வளவு?

இதனால் மொத்த பாதிப்பு 25,71,383 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 7 பேர் இறந்துள்ளனர். சேலம், திருப்பூரில் தலா 5 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 34,260 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,908 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,16,938 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது.

சென்னை நிலை என்ன?

20,185 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,59,865 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,74,94,317 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 189 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 200-க்கும் மேல் சென்ற கொரோனா பாதிப்பு 200-க்குள் குறைந்து விட்டது. ஆனால் கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

கோவையில் ஆதிக்கம்

கோவையில் மட்டும் 239 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 122 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 34 பேருக்கும், மதுரையில் 21 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 35 பேருக்கும், திருவள்ளூரில் 98 பேருக்கும், திருச்சியில் 62 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 90 பேருக்கும், விருதுநகரில் 8 பேருக்கும், ஈரோட்டில் 178 பேருக்கும், சேலத்தில் 70 பேருக்கும், நாமக்கல்லில் 60 பேருக்கும், தஞ்சாவூரில் 93 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் சதம்

சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் ஈரோட்டில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. மேலும் இணை நோய்கள் ஏதும் இல்லாத 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கொங்கு மண்டல பகுதிதிகளான கோவை, திருப்பூர், சேலம், ஈரோட்டில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

English summary
Corona infection has been confirmed in 1,985 people in Tamil Nadu today. Another 30 people were killed in the corona

Source: https://tamil.oneindia.com/news/chennai/1-985-people-were-infected-with-covid-19-in-tamilnadu-today-429213.html