விடிய விடிய அலறிய இளைஞர்.. 10 மணி நேரம் ஒரே பரபரப்பு.. அதுவும் கூவத்தில்.. அதிர்ச்சியில் உறைந்த சென்னை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: செல்பி எடுக்க ஆசைப்பட்டு, கூவத்தில் விழுந்துவிட்டார் ஒரு இளைஞர்.. இதையடுத்து 10 மணி நேரம் கழித்து, அவரை, படாதபாடு பட்டு சென்னை போலீசார் மீட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இளைஞர்களுக்கு செல்பி மோகம் பெருகி கொண்டிருக்கிறது.. ஒரு இடத்தை பார்த்துவிட்டால் போதும், அங்கே நின்று செல்பி எடுத்து, அதை சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்ட பிறகுதான் அடுத்த வேலையே ஆரம்பிக்கிறார்கள்.. இயல்புக்கும் திரும்புகிறார்கள்..

ஆனாலும் பல சமயங்களில் செல்பி எடுப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது… எத்தனையோ பேர் அநியாயமாக உயிரிழந்த சம்பவங்களும் நடந்து கொண்டுதான் உள்ளது. அப்படித்தான் ஒருவர் கூவம் பிரிட்ஜில் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார்..

திடீரென முதல்வர் இல்லத்தில் இருந்து வந்த தொலைப்பேசி அழைப்பு.. திக்குமுக்காடிப் போன ஜோதிமணிதிடீரென முதல்வர் இல்லத்தில் இருந்து வந்த தொலைப்பேசி அழைப்பு.. திக்குமுக்காடிப் போன ஜோதிமணி

நேப்பியர் பாலம்

நேற்று ராத்திரி 10 மணி இருக்கும்.. சென்னை நேப்பியர் பாலத்தில் இளைஞர் ஒருவர் நின்றுகொண்டு, செல்பி எடுத்துள்ளார்.. அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி, திடீரென பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் விழுந்து விட்டார்… கூவம் ஆற்றில் எந்நேரமும் நீர் நிறைந்துதான் இருக்கும்.. அந்த கூவத்தில் விழுந்துவிட்ட நிலையில், அவரால் நீந்தி மேலே வர முடியவில்லை.. அதனால் தத்தளித்து கொண்டே “காப்பாத்துங்க.. காப்பாத்துங்க” என்று கத்தி உள்ளார்..

அலறல்

நேரம் ஆக ஆக மக்கள் நடமாட்டமும் அங்கு குறைந்தது.. பஸ், பைக்குகளில் செல்பவர்களுக்கும் இவர் சத்தம் போட்டது காதில் விழவில்லை.. அந்த பக்கம் சென்றவர்களும் அவரை கவனிக்கவில்லை… விடிய விடிய கத்தி கொண்டே இருந்திருக்கிறார் இளைஞர்.. இந்த நிலையில் இன்னைக்கு காலையில் 6 மணிக்கு அவர் போட்ட சத்தம் அங்கிருந்த சிலருக்கு கேட்டுள்ளது..

மீட்பு

அதற்கு பிறகுதான் அவர்கள் கூவத்தில் எட்டிப்பார்த்து, ஒருவர் தத்தளித்து கிடப்பதை அறிந்து, ஒரு கயிறு எடுத்து வந்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.. ஆனால், அது தோல்வியில் முடிந்ததால், உடனடியாக போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. போலீசாரும் மீட்பு படையினருடன் விரைந்து வந்து, கூவத்தில் இறங்கி அந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.

சிகிச்சை

ராத்திரி 10 மணிக்கு உதவிக்கு கத்த ஆரம்பித்தவர்.. இன்னைக்கு காலை வரை சத்தம் போட்டுக் கொண்டே இருந்துள்ளார்.. உயிரை கையில் பிடித்து கொண்டு இரவெல்லாம் இருந்துள்ளார்.. மிகவும் பயந்து போய் காணப்பட்டார் இளைஞர்.. அதனால், அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.. அங்கு அவருக்கு டெஸ்ட்கள் எடுக்கப்பட்டு சிகிச்சையும் நடந்து வருகிறது..

English summary
Chennai Youth rescued after falling into river in Koovam

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-youth-rescued-after-falling-into-river-in-koovam-429619.html