சென்னையின் அதிகாரப்பூர்வ கொடியையும் சின்னத்தையும் பார்த்ததுண்டா? உருவாக்கியவர் யார் தெரியுமா? – Vikatan

சென்னைச் செய்திகள்

சமூக வலைத்தளங்களில் நேற்று முழுவதும் சென்னையை பற்றிய பெருமிதப் பதிவுகள் திக்குமுக்காட வைத்தன. ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ம் நாள் சென்னை நாள் கொண்டாடப்பட்டு வருவதால், நேற்று சென்னை நாள் கொண்டாட்டங்கள் களைகட்டின. சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டன. ஆனால் இந்த சென்னை இன்றைக்கு நம்மோடு இருப்பதற்குக் காரணமான ஓரு முக்கிய நிகழ்வு குறித்தும், சென்னையின் அதிகாரப்பூர்வ கொடி மற்றும் சின்னம் குறித்தும் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை.

சென்னையின் சின்னம் மற்றும் கொடி

’’சென்னை, இன்றைக்கு தமிழ்நாட்டோடு இருக்கிறது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, சென்னையை ஆந்திராவோடு இணைக்க, அங்குள்ளவர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். விசால ஆந்திரா என்ற கோரிக்கையை முன் வைத்து போராடிய பொம்மு ஸ்ரீராமுலு ரெட்டி, சென்னையை ஆந்திராவோடு இணைக்கக்கோரி உன்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்ததால், அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆந்திராவோடு சென்னையை இணைக்க முடிவு எடுத்துவிட்டார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தவருமான மா.பொ.சி மற்றும் அப்போதைய சென்னை மாநகராட்சி மேயர் செங்கவல்ராயன் உள்ளிட்டவர்கள், சென்னையை தமிழ்நாட்டோடு தக்கவைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். சென்னை மீது ஆந்திரர்கள் உரிமை கொண்டாடியதை எதிர்த்து, தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம் எனச் சென்னை மாநகாரட்சிக் கூட்டத்தில் முழங்கினார்.

Source: https://www.vikatan.com/government-and-politics/literature/chennai-has-an-official-flag-and-symbol-interlaced-with-its-history