10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகள்.. இடைக்கால உத்தரவு?.. சென்னை ஹைகோர்ட் இன்று இறுதி முடிவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது… இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து, கோர்ட் இன்று இறுதி முடிவு எடுக்கிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு சில மணி நேரம் முன்பு, முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காக சட்டம் இயற்றப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு.. விசாரணையில் இருந்து திடீரென விலகிய ஹைகோர்ட்டு நீதிபதி!வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு.. விசாரணையில் இருந்து திடீரென விலகிய ஹைகோர்ட்டு நீதிபதி!

விசாரணை

இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது… அதில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க, எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கணக்கெடுப்பு

சுப்ரீம்கோர்ட் உத்தரவின்படி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 1983-ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தியது. அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது… இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன், நேற்று விசாரணைக்கு வந்தது.

நியமனங்கள்

அப்போது, வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் நியமனங்கள் நடந்து வருவதால், அதை தடுக்கும் வகையில் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது… ஆனால், அரசு தரப்பிலோ, அரசு தரப்பில், “அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது… உள் ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை. அதனால், சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று வாதிடப்பட்டது.

இன்று முடிவு

இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இன்று முன்வைக்க, இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், அப்போது, இடைக்கால உத்தரவு குறித்து இறுதி முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்… இதையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்..!

English summary
10.5 percent reservation case coming hearing today Chennai Highcourt

Source: https://tamil.oneindia.com/news/chennai/10-5-percent-reservation-case-coming-hearing-today-chennai-highcourt-430909.html