அதிரடி அறிவிப்பு: சென்னை ஓஎம்ஆர் சாலையில் சுங்க வரி நிறுத்தம்: எங்கெங்கு சுங்கச்சாவடிகள் நீக்கம்? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் 4 இடங்களில் சுங்க வசூல் நிறுத்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு சாலைப்பணி திட்டங்கள் குறித்தும் புதிய டெண்டர் முறை குறித்தும் விவரங்கள் வெளியிட்டார்.

நடிகர் விமல் கொடுத்த பணமோசடி புகார்: சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேர் மீது எப்ஐஆர் நடிகர் விமல் கொடுத்த பணமோசடி புகார்: சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேர் மீது எப்ஐஆர்

அமைச்சர எ.வ.வேலு தனது உரையில் சாலை பணிகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர இருக்கிறோம். சில இடங்களில் ஒரு கோட்டம் முழுக்க சாலை பணிகளை ஒரே நிறுவனமே எடுத்து செய்கிறது. அதை மாற்ற உள்ளோம்.

கோட்டம்

ஒரு கோட்டத்தில் மொத்தமாக ஒரே நிறுவனம் சாலை டெண்டர் பணிகளை இனி எடுக்க முடியாது. பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவாக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஓ.எம்.ஆர் சாலையில் 4 இடங்களில் சுங்க வசூல் நிறுத்தப்படுகிறது. மக்கள் அங்கு பயணம் செய்ய டோல் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

எங்கு

பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் இனி சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்க உள்ளன. இதை முன்னிட்டு இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தை இது இனி எளிதாக்கும்.

இன்னும் பல டோல்

இன்னும் பல டோல்களை அகற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். சூரப்பட்டு, பரனூர், சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சுங்கச் சாவடியை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளோம். இது தொடர்பாக ஏற்கனவே மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றம்

அதேபோல் சென்னையில் மக்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்துவது தொடர்பாக புதிய பாலங்களை கட்ட ஆலோசனை செய்து வருகிறோம். மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூபாய் 56 கோடியில் மேம்பாலம் கட்ட திட்டமிட்டுளோம். சாலைகளை விரிவுபடுத்தவும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்யவும் திட்டங்கள் வகுத்து வருகிறோம், என்று அமைச்சர் எ.வ. வேலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

English summary
Tamilnadu govt closes down the 4 tolls in OMR Chennai ahead of Metro 2nd phase works.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tn-govt-closes-down-the-4-tolls-in-omr-chennai-431171.html