Heavy rain in various places in Chennai! || சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் திநகர், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை, 

தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திரா, ஒடிசா பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் மத்திய, மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்படி தி.நகர், கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் பெருங்களத்தூர், வண்டலூர், பூந்தமல்லி, திருவேற்காடு, காட்டுப்பாக்கம், திருநின்றவூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் கோயம்பேடு, வடபழனி, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், பாடி, கொரட்டூர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.  

அடுத்த இரண்டு மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/08/28232037/Heavy-rain-in-various-places-in-Chennai.vpf