சென்னை டிராபிக் போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த வடமாநில டிரைவர் கைது – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

மொழி தெரியாததால் செய்வதறியாது திகைத்த லாரி டிரைவர் முஸ்தாக் அகமது போலீசார் கூறியதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை

சென்னை போரூர் ஏரி அருகே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் மராட்டிய மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று செல்ல முற்பட்டது. அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீசார் லாரியை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் மாற்றுச் சாலையில் செல்லும் படி கூறியுள்ளனர். 

ஆனால் மொழி தெரியாததால் செய்வதறியாது திகைத்த லாரி டிரைவர் முஸ்தாக் அகமது போலீசார் கூறியதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், போக்குவரத்து போலீசை லாரி டிரைவர் அறைந்துள்ளார். தான் வைத்திருந்த கத்தியைக் காட்டி  டிரைவர்  முஸ்தாக் அகமது போலீசை  மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் லாரி ஓட்டுனர் முஸ்தாக் அகமதை கைது செய்தனர். அவர் மீது  அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்கியது, ஆபாசமாக பேசியது என  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/08/31140146/Chennai-Traffic-Policeman-slapped-on-the-cheek-Northland.vpf