சூப்பர் செய்தி.. சென்னை புறநகர் ரயில்களில்.. ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் Peak hoursஇல் பயணிக்க ஆண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகச் சென்னை ரயில்வே அறிவித்துள்ளது. 2 டோஸ் வேக்சின் போட்ட சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையைக் காண்பித்து ஆண்கள் எப்போது வேண்டுமானாலும் டிகெட் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் உச்சமடைந்தது. அப்போது தினசரி பாதிப்பு மாநிலத்தில் 30ஆயிரத்திற்கும் மேல் சென்றது.

3 மாத பச்சிளம் குழந்தையை பட்டினி போட்டு அடித்த குடிகார பெற்றோர் - மனநல காப்பகத்தில் சிகிச்சை3 மாத பச்சிளம் குழந்தையை பட்டினி போட்டு அடித்த குடிகார பெற்றோர் – மனநல காப்பகத்தில் சிகிச்சை

கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் இரு வாரங்களுக்குத் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

பல கட்டுப்பாடுகள்

அதன் பின்னரே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் பஸ், மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல ரயில்வே சென்னையில் இயங்கும் புறநகர் ரயில் சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டன.

புறநகர் ரயில்

கடந்த மே 10ஆம் தேதி மின்சார ரயில்களில் பயணிப்போருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி முன்களப் பணியாளர்களும் அரசால் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்களும் தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்துப் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது. அவர்களைத் தவிர இதர பொதுமக்கள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ஆண்கள்

கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு முதலில் பெண்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் அனைவரும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடுகளின்படி மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள Peak hoursஆன காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை அத்தியாவசிய பணியாளர்களைத் தவிர இதர ஆண்கள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தடை நீக்கம்

இந்நிலையில் இந்தக் கட்டுப்பாட்டை நீக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் டிக்கெட் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 டோஸ் வேக்சின் போட்ட சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையைக் காண்பித்து ஆண்கள் எப்போது வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள்

மாணவர்கள் வேக்சின் போட்ட சான்றிதழ் காட்ட வேண்டியது கட்டாயமில்லை, அடையாள அட்டையை மட்டும் காண்பித்தால் போதும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு சீசன் டிக்கெட் மற்றும் ரிட்டன் டிக்கெட் என இரண்டும் வழங்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வேக்சின் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை இல்லாத ஆண்களுக்கு மட்டும் பீக் ஹவர்ஸில் பயணிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Male passengers restriction in Chennai Suburban Train service removed. Corona relaxation latest.

Source: https://tamil.oneindia.com/news/chennai/southern-railway-lifts-restrictions-for-male-passengers-in-chennai-suburban-train-431827.html