சிங்காரச் சென்னை 2.0 – புதிதாக 3 மேம்பாலங்கள் | 3 new flyovers under Singara Chennai 2.0 project – tv.puthiyathalaimurai.com

சென்னைச் செய்திகள்

[embedded content]

முதலமைச்சரின் கனவுத்திட்டமான ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.

Advertisement

சென்னையில் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு, சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஒருகட்டமாக சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட சுமார் 340 கோடியில் புதிதாக மூன்று மேம்பாலங்களைக் கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே கணேசபுரத்தில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வழி மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகும் ‘அண்ணாத்த’ஃபர்ஸ்ட் லுக்? 

Advertisement

தியாகராயர் நகரில் உஸ்மான் சாலையிலிருந்து அண்ணா சாலை வரை 90 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஓட்டேரி நல்லா அருகே 75 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் இரண்டு வழி மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றுக்கான திட்ட அறிக்கைகள் ஒரு மாதத்தில் தயாரிக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/115098/3-new-flyovers-under-Singara-Chennai-2-0-project