சென்னை – புதுச்சேரி இ.சி.ஆர் சாலையில் போர் விமானம் தரையிறங்கும் வசதி: கட்கரி – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

புதுடில்லி: சென்னை – புதுச்சேரி இ.சி.ஆர் சாலையில் போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், பாா்மரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப் படையின் அவசரகால இறங்குதளம் திறக்கப்பட்டது. இந்திய விமானப் படை விமானத்தை நெடுஞ்சாலையில் அவசர காலங்களில், விமானத்தின் ஓடுப்பாதையாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக இறங்குதளத்தில் தரையிறக்கி சோதித்து பார்க்கும் வகையில், ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலாவதாக விமானப்படைக்கு சொந்தமான சி 130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, விமானப்படை தளபதி பதுரியா ஆகியோருடன் தரையிறங்கியது. அடுத்ததாக ஜாகுவார், சுகோயச் 30 எம்கேஐ ரக போர் விமானங்கள் நெடுஞ்சாலையில் தரையிறங்கியதுடன் அங்கிருந்து கிளம்பி சென்றன.


இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது: நேற்று, விமானப்படை தளபதி என்னிடம் வந்து, பார்மரில் விமானப் படை விமானத்தை தரையிக்கும் வகையில் இந்த தேசிய நெடுஞ்சாலையை உருவாக்க 1.5 ஆண்டுகள் ஆனதாக கூறினார். அதற்கு நான், 1.5 ஆண்டுகளுக்கு பதிலாக 15 நாட்களுக்குள் விமானப்படைக்காக தரமான இறங்குதளம் உருவாக்குவோம் என அவரிடம் கூறினேன். சென்னை, புதுச்சேரி உட்பட 19 இடங்களில் சாலையில் போர் விமானம் இறங்கும் வசதி ஏற்படுத்தப்படும். சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் (இ.சி.ஆர்) போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Dinamalar iPaper

பாராலிம்பிக் வீரர்களுக்கு விருந்தளித்து பிரதமர் பாராட்டு


பாராலிம்பிக் வீரர்களுக்கு விருந்தளித்து பிரதமர் பாராட்டு(2)

முந்தய

‛பிரிக்ஸ்' மூலம் அதிக முடிவுகள் வேண்டும்: பிரதமர் மோடி


‛பிரிக்ஸ்’ மூலம் அதிக முடிவுகள் வேண்டும்: பிரதமர் மோடி

அடுத்து








வாசகர் கருத்து (7)



Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2841054