என்னாச்சு.. சென்னையில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.. உயிரிழப்பும் அதிகரிப்பு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 4-வது நாளாக அதிகரிக்கும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் பாதிப்பு அதிவேகம்.. என்ன காரணம்?தமிழகத்தில் 4-வது நாளாக அதிகரிக்கும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் பாதிப்பு அதிவேகம்.. என்ன காரணம்?

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக கொரோனா அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் மூன்று நாட்களாக பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. இதேபோல் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.

சற்று குறைந்த கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும்.

உயிரிழப்பு எண்ணிக்கை

இதனால் மொத்த பாதிப்பு 26,33,839 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றை விட உயிரிழப்பு குறைந்துள்ளது.சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். செங்கல்பட்டில் 3 பேரும், திருவண்ணாலையில் 3 பேரும் இறந்துள்ளனர். கோவையில் 2 பேரும், திருச்சியில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,168 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,512 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,82,198 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து குறைவாக இருக்கிறது.

சென்னை என்னாச்சு?

16,473 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,55,807 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,33,22,131 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 197 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக பாதிப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று பாதிப்பு 170 ஆக இருந்த நிலையில் இன்று திடீரென அதிகரித்துள்ளது. அதே வேளையில் கோவையில் பாதிப்பு நேற்று 218 ஆக இருந்த நிலையில் இன்று 212 ஆக குறைந்துள்ளது.

தஞ்சாவூர் ஆதிக்கம்

செங்கல்பட்டில் 113 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 31 பேருக்கும், மதுரையில் 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 32 பேருக்கும், திருவள்ளூரில் 73 பேருக்கும், திருச்சியில் 46 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 83 பேருக்கும், விருதுநகரில் 6 பேருக்கும், ஈரோட்டில் 160 பேருக்கும், சேலத்தில் 54 பேருக்கும், நாமக்கல்லில் 49 பேருக்கும், தஞ்சாவூரில் 115 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் சதம்

சென்னை, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. குறிப்பாக தஞ்சாவூர், ஈரோட்டில் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் மீண்டும் பாதிப்பு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீண்டும் கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இதுவாகும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

English summary
Corona infection has been confirmed in 1,608 people in Tamil Nadu today. A further 22 people were killed in the corona

Source: https://tamil.oneindia.com/news/chennai/covid-19-infection-has-been-confirmed-1-608-people-in-tamil-nadu-today-432698.html