முடிவில் மாற்றம்…சென்னை காவல் ஆணையரகம் 2-ஆக பிரிப்பு?… உருவாகிறது தாம்பரம் ஆணையரகம் ? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை காவல் ஆணையரகம் நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்படுவதாகவும், சென்னை, தாம்பரம், ஆவடி என அழைக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஆவடி ஆணையரகம் அமைக்கப்படவில்லை, தாம்பரம் ஆணையரகம் மட்டுமே அமைக்கப்படுகிறது என்கிற தகவல் அதாவது சென்னை இரண்டாக பிரிக்கப்படுகிறது, சென்னை மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகமாக அழைக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை காவல் ஆணையரகம் குறித்து நாம் ஏற்கெனவே எழுதியிருந்தோம். காவல் துறை எல்லை வருவாய்த்துறை எல்லையைத்தாண்டி கண்டு விரிந்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சென்னை காவல்துறை எல்லை நீண்டு விரிந்துள்ளது.

சென்னை காவல் ஆணையரகம் பிரிப்பு? 2 அல்லது 3 ஆக பிரிப்பா?-முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதா?சென்னை காவல் ஆணையரகம் பிரிப்பு? 2 அல்லது 3 ஆக பிரிப்பா?-முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதா?

2008 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட சென்னை ஆணையரகம்

இதற்கும் முன்னரே 10 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை காவல்துறை இரண்டாக பிரிக்கப்பட்டு புறநகர் ஆணையரகம் என அமைக்கப்பட்டிருந்தது. 2006-2011 திமுக ஆட்சியில் 2008 ஆம் ஆண்டு புறநகர் ஆணையரகம் மவுண்ட் துணை ஆணையரகம் உள்ளிட்ட 3 காவல் மாவட்டங்களை கொண்டு அமைந்திருந்தது. ஐஜி அந்தஸ்தில் இருந்த ஜாங்கிட், ராஜேஷ் தாஸ் அதன் பின்னர் கரன்சின்ஹா காவல் ஆணையர்களாக இருந்த நிலையில் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் ஒரே ஆணையரகமாக மாற்றினார்.

அதன் பின் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இதுகுறித்து பரிசீலிக்கப்படவில்லை. ஆனால் சென்னை காவல் ஆணையரக எல்லைகள் விரிவடைவதும், புதிதாக பூந்தமல்லி, தாம்பரம் காவல் மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரையும் முதல்வர் பார்வையில் உள்ளது. தாம்பரம் மாநகராட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதை காவல் ஆணையரகமாக மாற்றவும் பரிந்துரை உள்ளது.

சென்னையின் 14 காவல் மாவட்டங்கள்

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையரகத்தில் ஏற்கெனவே உள்ள 1.வண்ணாரப்பேட்டை, 2. பூக்கடை, 3.மாதவரம், 4.திருவல்லிக்கேணி, 5.கீழ்ப்பாக்கம், 6. மயிலாப்பூர், 7.அடையாறு, 8.தி.நகர், 9.மவுண்ட், 10. அண்ணாநகர், 11.புளியந்தோப்பு , 12. அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்டங்களுடன் புதிதாக 13.பூந்தமல்லி, 14.தாம்பரம் என கூடுதலாக உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உருவாக்கப்பட்டு சென்னை நகரை இரண்டாக பிரிக்கப்பட்டால் அதில் சென்னை காவல் ஆணையரகத்தில் 1.வண்ணாரப்பேட்டை, 2. பூக்கடை, 3.மாதவரம், 4.திருவல்லிக்கேணி, 5.கீழ்ப்பாக்கம், 6. மயிலாப்பூர், 7.அடையாறு, 8.தி.நகர், 9.அண்ணாநகர், 10.புளியந்தோப்பு என 10 துணை ஆணையர்கள் அடங்கியதாக அமையும்.

தாம்பரம் காவல் ஆணையரகம்

சென்னை புறநகர் ஆணையரகம் 1. அம்பத்தூர், 2.மவுண்ட் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 3.பூந்தமல்லி, 4.தாம்பரம் இணைந்து புறநகர் மாவட்டமாக அமையும். ஏடிஜிபி தலைமையில் காவல் ஆணையர், சட்டம் ஒழுங்குக்கு மட்டும் ஒரு அடிஷனல் கமிஷனர் 2 டிஐஜிக்கள், 4 துணை ஆணையரகள் என்கிற அடிப்படையில் அமைக்க பரிந்துரை உள்ளது.

முடிவில் மாற்றம்?

கடந்த முறை சென்னையை மூன்று காவல் ஆணையரகமாக பிரிப்பது என்றும் மொத்தமுள்ள 14 காவல் மாவட்டங்களில் 5,5,4 என்கிற விகிதத்தில் பிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியான நிலையில் தற்போது கியுள்ளது. அதாவது 1. சென்னை காவல் ஆணையரகம், 2. தாம்பரம் ஆணையரகம் 2 ஆக மட்டுமே பிரிக்கும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அறிவிப்பு?

இதற்கான அறிவிப்பை காவல்துறை மானியக்கோரிக்கையில் முதல்வர் தனது பதிலுரையில் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அதன் காவல் ஆணையர் யாராக இருப்பார் என்பதையும் விரைவில் நியமிக்கும் அறிவிப்பு வரும். அவ்வாறு மாற்றம் வரும்பட்சத்தில் ஏடிஜிபி அந்தஸ்த்தில் பல மாற்றங்கள் வரும் என தெரிகிறது.

English summary
Chennai Police Commissionerate to be divided into 2, Tambaram Commissionerate is being formed? CM stalin may be annoucing today

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-commission-to-be-divided-into-2-tambaram-commission-is-being-formed-cm-today-432708.html