அடடே.. ஆளுநர் ரவி பொறுப்பேற்றதும் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 2 புத்தகங்களை கவனித்தீர்களா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

தமிழ்நாடு புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரு புத்தகங்களை பரிசாக வழங்கினார். “குறிப்பிட்ட” அந்த இரண்டு புத்தகங்களை முதல்வர் தேர்ந்தெடுத்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

image

RN Ravi sworn-in as Tamil Nadu Governor | OneIndia Tamil

ஏனென்றால், அதில் ஒன்று கீழடி தமிழர் நாகரிகம் தொடர்பானது, மற்றொன்று சென்னை வரலாறு தொடர்பானது .

புதிய ஆளுநர் வந்ததும் வராததுமாக தமிழகம் மற்றும் சென்னையின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த இரு புத்தகங்களையும் அவருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார்.

ஆளுநர் பதவியேற்பு.. உள்நோக்கம் இருப்பதாக கூறி வராமல் போன காங்கிரஸ்.. புறக்கணித்த இடதுசாரிகள்ஆளுநர் பதவியேற்பு.. உள்நோக்கம் இருப்பதாக கூறி வராமல் போன காங்கிரஸ்.. புறக்கணித்த இடதுசாரிகள்

முதல்வர் பரிசு

ராஜ் பவனில் இன்று நடைபெற்ற புதிய ஆளுநர் பதவியேற்பு விழாவின் போது முதலமைச்சர், ஆளுநருக்கு இரு புத்தகங்களை பரிசாக வழங்கி பொன்னாடை பரிசளித்தார். ஆளுநரின் மனைவிக்கும் பொன்னாடை வழங்கி கவுரவித்தார்.

மோடி, சோனியா காந்தி

பொதுவாக எந்த ஒரு முக்கிய பிரமுகர்களை சந்தித்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் புத்தகங்களை பரிசாக வழங்கி வருகிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் டெல்லி பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தபோதும் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

செம்மொழி சிற்பிகள்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது செம்மொழி சிற்பிகள் என்ற புத்தகத்தை அவர் பரிசாக வழங்கியிருந்தார். தமிழ் மொழியின் சிறப்பு காரணமாக 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களின் உருவ சித்திரம் ஆகியவை இந்த நூலில் அடங்கியிருந்தன. இதேபோன்று, சோனியா காந்தியை சந்தித்த போது Journey Of A Civilization Indus To Vaigai என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார் ஸ்டாலின். தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதி ஒடிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஆர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், இந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார்.

இரு புத்தகங்கள்

இப்போது தமிழக ஆளுநராக பதவி ஏற்றுள்ள ரவிக்கு, கீழடி என்ற புத்தகத்தையும் மெட்ராஸ் என்ற முத்தையாவால் திருத்தம் செய்யப்பட்ட புத்தகத்தையும் பரிசாக வழங்கி இருக்கிறார் ஸ்டாலின். இரண்டுமே ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களாகும். யாருக்கு புத்தகங்கள் கொடுத்தாலும் அதில் தமிழ் கலாச்சாரம் முன்னே வந்து நிற்குமாறு உள்ள புத்தகங்களை தேர்ந்தெடுத்து அவர் வழங்குவது கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கிறது.

புத்தக தேர்வு

புத்தக தேர்வு பின்னணியில் முதல்வர் மட்டுமே கிடையாதாம். அவரின் சிறப்பு செயலாளர் மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரான உதயசந்திரன் ஐஏஎஸ் இருப்பதாகவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

English summary
Chief Minister MK Stalin today presented two books to RN Ravi, the new Governor of Tamil Nadu. It is seen as very important that the Chief Minister has selected those two books which are “specific”.

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-edited-by-muthiah-and-keeladi-english-version-are-the-books-gifted-by-the-mk-stalin-to-govern-433284.html