அந்த தமிழ்நாடு வீரர்தான் சிக்கல்.. தோனிக்கு சிம்ம சொப்பனமான சென்னை பையன்.. சிஎஸ்கேவிற்கு செக்கா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் ஏற்கனவே சிஎஸ்கே பிளே ஆப் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிலும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் வரிசையாக மும்பை, பெங்களூரை வீழ்த்தி சிஎஸ்கே வலிமையான நிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் வென்றால் சிஎஸ்கே கண்டிப்பாக பிளே ஆப் சென்றுவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இன்று நடக்கும் மேட்ச் அதிகம் கவனிக்கப்படும். ஏற்கனவே முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை சிஎஸ்கே வீழ்த்திவிட்டது. ஆனால் இன்று கொல்கத்தாவை சிஎஸ்கே அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது.

'பயங்கரம்..' 4 பேரை கொடூரமாக கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட தாலிபான்கள்.. காரணத்தை கேட்டால் ஷாக்‘பயங்கரம்..’ 4 பேரை கொடூரமாக கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட தாலிபான்கள்.. காரணத்தை கேட்டால் ஷாக்

புதிய டீம்

ஏனென்றால் இப்போது இருக்கும் கொல்கத்தா அணி பழைய டீம் கிடையாது. இந்த கொல்கத்தா அணி புதிய வேகத்தில் ஆடி வருகிறது. முதல் ஓவரில் இருந்தே கொல்கத்தா வீரர்கள் அதிரடி காட்ட தொடங்கி உள்ளனர். கில், வெங்கடேஷ், திரிப்பாதி என்று டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்கள். மிடில் ஆர்டரிலும் ராணா, ரசல், டிகே, இயான் என்ற பெரிய பட்டாளமே இருக்கிறது. இதெல்லாம் போக கொல்கத்தா அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக உள்ளது.

பேட்டிங்

கொல்கத்தா அணியில் வருண், ரசல், சுனில் நரேன், லோகி பெர்குசன் என்ற பெரிய பட்டாளமே இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணிக்கு இன்று கொல்கத்தா கண்டிப்பாக மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இன்று சிஎஸ்கே அணிக்கு தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தி சிம்ம சொப்பனமாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. டி 20 போட்டிகளில் வருண் சிறப்பாக ஆட கூடியவர்.

பவன்

அதிலும் இப்போது டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வான பின் இவரின் ஆட்டம் புதிய உச்சம் தொட்டுள்ளது. இவரின் மிஸ்ட்ரி ஸ்பின் பவுலிங் கணிக்க முடியாத அளவிற்கு சென்றுள்ளது. ஸ்லோ பால் ஸ்பின், லென்த் பால் ஸ்பின், புல்டாஸ் செய்வது போல பந்தை தூக்கி வீசி திடீரென ஸ்பின் செய்வது என்று மைதானத்தில் வருண் சக்ரவர்த்தி மேஜிக் நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார். கடந்த இரண்டு கொல்கத்தா போட்டியிலும் இவர் சிறப்பாக ஆடினார்.

மும்பை

மும்பைக்கு எதிரான போட்டியில் வருண் சிறப்பாக பவுலிங் செய்தார். அந்த போட்டியில் கொல்கத்தா வெற்றிபெற இவர் முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல் பெங்களூருக்கு எதிரான போட்டியில் வருண் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த போட்டியிலும் கொல்கத்தா வெற்றிக்கு வருண்தான் காரணமாக இருந்தார்.

தோனி

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு இவர் தலைவலியாக இருப்பார். சென்னையை சேர்ந்த வருண் இன்று தோனிக்கும் கடும் சிக்கலாக இருப்பார். தோனி பல முறை வருண் ஓவரில் கடுமையாக திணறி இருக்கிறார். இதற்கு முன்பே வருண் ஓவரில் அவர் அவுட்டும் ஆகியுள்ளார். இதனால் இன்று தோனி, டு பிளசிஸ், ரூத்துராஜ் ஆகியோருக்கு வருண் கடும் போட்டியாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
CSK vs RCB: Who will be the tough competitor for the Chennai team in today match?

Source: https://tamil.oneindia.com/news/chennai/csk-vs-rcb-who-will-be-the-tough-competitor-for-the-chennai-team-434013.html