கனமழை, புயலை எதிர்கொள்ள தயாராகி வரும் சென்னை மாநகராட்சி – தினமணி

சென்னைச் செய்திகள்

கனமழை, புயலை எதிர்கொள்ள தயாராகி வரும் சென்னை மாநகராட்சி

பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், கனமழை மற்றும் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி படுவேகமாகத் தயாராகி வருகிறது.

சென்னையில் உள்ள 10வது மண்டலத்தில் சாலிகிராமத்தில் உள்ள அரசுக் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் நீர் வெளியேற்றும் மோட்டார்கள், மர அறுவை இயந்திரம் போன்றவை வெளியே எடுக்கப்பட்டு, அவை நல்ல இயங்கும் திறனில் இருக்கிறதா என்று  அதிகாரிகள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டது.

இதையும் படிக்கலாமே.. சென்னையில் எகிறும் மின் கட்டணம்; குவியும் புகார்கள்

ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவையும் இயங்கும் திறனுடன் இருக்கிறதா என்றும், கோளாறு இருந்தால் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சென்னை முழுவதம் மழைநீர் வடிகால்வாய்கள் சுத்தம்செய்யப்பட்டு, கழிவுநீர் கால்வாய்களில் சேறுகள், குப்பைகள் அகற்றப்பட்டு, மழைநீர் சாலைகளில் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/oct/05/chennai-corporation-is-preparing-for-heavy-rains-and-storms-3712222.html