“காவிரி ஆற்றில் அதிகளவில் ரசாயனங்கள் கலப்பு” – சென்னை ஐஐடி ஆய்வில் தகவல் – தந்தி டிவி

சென்னைச் செய்திகள்

மருந்துகள் கழிவு உள்ளிட்ட பல்வேறு ரசாயன பொருட்கள் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலந்திருப்பதாக சென்னை ஐஐடி ஆய்வில்
தெரிய வந்துள்ளது.

சென்னை ஐஐடியின் சிவில் இன்ஜினியரிங் துறை  குழுவினர்  காவிரி ஆற்றில் ஏற்படும் மாசு தொடர்பாக ஆய்வை மேற்கொண்டனர்.  

தமிழகத்தில்  11 இடங்களிலும்,  கர்நாடகத்தில் 11 இடங்களிலும் என மொத்தம் 22 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வின் போது மருந்துகள் கழிவுப் பொருட்கள்,   உலோக மற்றும் பல்வேறு இரசாயன பொருட்கள் காவிரி ஆற்றில் அதிகளவில் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, தண்ணீர் மாசுபாடு காரணமாக பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசிடம்  இடைக்கால ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம்  ஆய்வு பணிகள் முழுமையாக முடிவடையும் என்றும் சென்னையில் செய்தியளார்களிடம் பேசிய ஐஐடி பேராசிரியர் பிலிப் தெரிவித்துள்ளார். 

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/2021/10/08131534/2773325/iit-on-cauvery-water-issue.vpf