சென்னை vs கொல்கத்தா.. செம்மையான பைனல்.. பலம் என்ன?.. பலவீனம் என்ன?.. ஓர் அலசல்! – myKhel Tamil

சென்னைச் செய்திகள்

ருத்ராஜ் கெய்க்வாட், டூ பிளிசிஸ்

கொல்கத்தா, சென்னை அணிகளின் பலம், பலவீனம் என்ன? என்பது பற்றி இப்போது காண்போம். முதலில் தல தோனி தலைமையிலான சென்னை அணி பற்றி பார்ப்போம். சென்னை அணியின் முதுகெலும்பே ஒப்பனர்கள்தான் ருத்ராஜ் கெய்க்வாட், டூ பிளிசிஸ் 8 ஓவர்கள் நிலைத்து நின்று விட்டால் போதும். சென்னை அணியின் வெற்றி உறுதி.

தோனியின் தலைமை பண்பு

தோனியின் தலைமை பண்பு

அடுத்ததாக தோனியின் தலைமை பண்பு. இக்கட்டான நேரத்தில் சரியான முடிவெடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்வது மிகப்பெரிய பலமாகும். ஹசல்வுட், ஷர்துல் தாகூர் தொடர்ந்து நிலையாக நல்ல முறையில் பந்துவீசி வருவது அணிக்கு சாதகமான அம்சமாகும். மொயீன் அலி, அம்பத்தி ராயுடு ஆகியோர் தடுமாறுவது பலவீனமாகும். உத்தப்பாவும் தொடர்ச்சியாக சறுக்கி கடைசி போட்டியில்தான் ரன் அடித்துள்ளார். அவர் நிலையாக விளையாடுவது அவசியம்.

வெங்கடேஷ், கில்

வெங்கடேஷ், கில்

அடுத்ததாக கேப்டன் தோனியின் பார்ம். தோனியின் கேப்டன்சி அணிக்கு எந்த அளவுக்கு பலமாக இருக்கிறதோ, அவரது பேட்டிங் அந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது. 15 போட்டிகளில் வெறும் 114 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். கடந்த போட்டியில் எழுச்சி பெற்றதுபோல் இந்த போட்டியிலும் அவர் ரன் சேர்பப்து அவசியம். கொல்கத்தா அணியின் பலமும் ஓப்பனர்கள்தான். அதிரடியாக விளையாடி வெறும் வெங்கடேஷ், கில், ராணா, திரிபாதி நம்பிக்கை சேர்க்கினறனர்.

மோர்கனின் சொதப்பல் பார்ம்

மோர்கனின் சொதப்பல் பார்ம்

கொல்கத்தாவின் பெரும் பலமே ஸ்பின்னர்கள்தான். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப் அல் ஹஸன் மூவர் கூட்டணி சிறப்பாக பந்துவீசி விட்டால் போதும். சென்னை அணி வெறும் கையோடு திரும்ப வேண்டியதுதான். கொல்கத்தா அணிக்கு பெரும் பலவீனம் கேப்டன் மோர்கன்தான். தொடர்ந்து சொதப்பி வரும் அவர் கடைசி போட்டியிலாவது அசத்த வேண்டியது அவசியம். இதேபோல் தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் பேட்டிங்கில் ஜொலிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

Source: https://tamil.mykhel.com/cricket/chennai-vs-kolkata-what-is-the-strength-what-is-the-weakness-029227.html