பரோட்டா சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கிய கல்லூரி மாணவர் மரணம்.. சென்னையில் பரபரப்பு சம்பவம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பரோட்டா சாப்பிட்டதால் கல்லூரி மாணவர் பலியானதாக வெளியான தகவல் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

image

காலிஃப்ளவர் பக்கோடாவில் பேண்டேஜ்: அதிர்ச்சி அடைந்த பெண்… வாக்குவாதம்!

சென்னை கொளத்தூர் விவி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அரியகுட்டி. இவரது மகன் சிபி சங்கமித்ரன் (17). அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார்.

நேற்று இரவு கடையில் புரோட்டா சாப்பிட்டு விட்டு 10 மணி அளவில் வீட்டிற்கு வந்தார்.

நான் ஸ்டாலின் பேசுகிறேன்.. 6ம் வகுப்பு மாணவியின் கடிதம்.. உடனே போன் போட்ட முதல்வர்.. என்ன சொன்னார்?நான் ஸ்டாலின் பேசுகிறேன்.. 6ம் வகுப்பு மாணவியின் கடிதம்.. உடனே போன் போட்ட முதல்வர்.. என்ன சொன்னார்?

மூச்சு திணறல்

இந்த நிலையில், அதிகாலையில் சிபி சங்மித்ரனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பார்த்தனர். பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தனியார் வாகனத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிபி சங்கமித்ரன் உடலை, கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனை செய்வதற்காக உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பரோட்டா

இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரோட்டோ சாப்பிட்டதால் தான் கல்லூரி மாணவன் சிபி சங்கமித்ரன் இறந்து போனாரா என்பது தொடர்பாக பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காலிஃபிளவர் பக்கோடா

உணவு பொருள் சம்மந்தமான மற்றொரு பிரச்சினை, ஆவடி அடுத்த திருநின்றவூரில் நடந்துள்ளது. அங்குள்ள தனியார் பல்பொருள் அங்காடியில், பானு என்ற பெண், காலிஃபிளவர் பக்கோடா வாங்கியுள்ளார். அதை வீட்டுக்கு கொண்டு சென்றபோது, காலிபிளவர் பக்கோடாவை பானுவின் தங்கை சாப்பிட்டுள்ளார்.

வாந்தி

சாப்பிட்ட சிறிது நேரத்தில், பானுவின் தங்கைக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சந்தேகமடைந்த பானு, காலிபிளவர் பார்சலை திறந்து பார்த்தபோது அதில் ரத்தக் கறையுடன் பேண்டேஜ் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக கடைக்காரரிடம் போய் இதுபற்றி பானு கேட்டுள்ளார். ஆனால், கடை உரிமையாளர், சகோதரிகள் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். எனவே இதுகுறித்து, பானு காவல் நிலையம் மற்றும் உணவு பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அந்த வாடிக்கையாளர் தாய், கூறும்போது, சூப்பர் மார்க்கெட்டில் குழந்தைகள் முதல் முதியவர் வரை பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன இதில் காலிஃப்ளவர் பக்கோடாவை வாங்கி சென்றேன். அதை உண்ட எனது மகள் வாயில் ரத்தத்துடன் இந்த பேண்டேஜ் சிக்கியது. இதையடுத்து கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், சம்மந்தப்பட்ட சூப்பர் மார்கெட், அது, தங்களிடம் வாங்கிய பக்கோடா இல்லை என மறுத்துள்ளனர்.

English summary
A college student was died due to eating Parota has caused panic in Chennai. Kolathur police are investigating the incident.

Source: https://tamil.oneindia.com/news/chennai/a-college-student-was-died-due-to-eating-parota-in-chennai-435924.html