நெருங்கும் வடகிழக்கு பருவமழை.. 2015 சென்னை வெள்ளம் மீண்டும் ஏற்படுமா?.. அமைச்சர் பதில்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: 2015ல் ஏற்பட்டது போல சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

முதல்வர் கான்வாயில் வாகனங்கள் குறைப்பு.. நல்ல முடிவு.. தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!முதல்வர் கான்வாயில் வாகனங்கள் குறைப்பு.. நல்ல முடிவு.. தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

சென்னை

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது: 2015ல் ஏற்பட்டது போல சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாது. அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை நாங்கள் எடுத்து வருகிறோம். தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட கூடிய இடங்கள், தாழ்வான பகுதிகள் போன்றவை கண்டறியப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை

தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாம் வாரத்தில் துவங்கி டிசம்பர் மாதம் வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.

மழை காலம்

அதற்கு ஏற்றவாறு தற்போது தமிழகத்தில் மழை காலங்களில் பாதிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து பட்டியலை தயாரித்து உள்ளோம். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன்

சென்னையை பொருத்தவரையில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தெரிவித்தார். மேலும் பேரிடர் காலத்தில் எடுக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்டம் வாரியான தொலைபேசி எண்களையும் வெளியிட்டார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகள்

தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட கூடிய இடங்கள்,தாழ்வான பகுதிகள் போன்றவை கண்டறியப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2015-இல் ஏற்பட்டது போல சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாது. அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்தார்.

English summary
Minister K.K.S.S.R.Ramachandran says that 2015 flood cannot be happened in Chennai again.

Source: https://tamil.oneindia.com/news/chennai/k-k-s-s-r-ramachandran-says-that-2015-flood-cannot-be-happened-in-chennai-436368.html