அமெரிக்கா கோரிக்கை.. சென்னையில் பாங்காக் நிறுவன ஹெலிகாப்டர் ‘சிறை பிடிப்பு!’ அமலாக்கத் துறை அதிரடி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அமலாக்க இயக்குனரகம் (ED) பாங்காக் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டரை சென்னையில் தடுத்து நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பரஸ்பர உதவி நடவடிக்கைகளை எடுக்க ஏற்கனவே அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதால், அமெரிக்க கோரிக்கையை ஏற்று சென்னையில் வைத்து பாங்காங் நிறுவன ஹெலிகாப்டர் மடக்கி நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றம் இந்த ஹெலிகாப்டரை பிடிக்க வாரண்ட் பிறப்பித்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'என்ன.. டாஸ்மாக் 6 வருஷமா நஷ்டத்துல இயங்குதா?'.. அதிரடி மீம்ஸ்களால் தெறிக்க விடும் நெட்டிசன்கள்!‘என்ன.. டாஸ்மாக் 6 வருஷமா நஷ்டத்துல இயங்குதா?’.. அதிரடி மீம்ஸ்களால் தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

சென்னையில் சிறைபிடிப்பு

ஹமீத் இப்ராஹிம் மற்றும் பாங்காக்கின் மரிலாக் ஏவியோன் சர்வீசஸ் கோ லிமிடெட் அப்துல்லா ஆகியோருக்குச் சொந்தமான பெல் 214 ஹெலிகாப்டர், சென்னையில் உள்ள, “ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கு மண்டலத்தில் (FTWZ)” சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை

பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ், “ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கு மண்டலத்தில் (FTWZ)” இருந்து இந்த ஹெலிகாப்டரோ அல்லது அதன் உதிரி பாகங்களோ வெளியே போகக் கூடாது என்று அமலாக்க இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுத்துள்ளதால் அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றம்

“கொலம்பியாவில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டை நிறைவேற்றும் பொருட்டு, அமெரிக்கா எழுப்பிய கோரிக்கையின் பேரில், ஹெலிகாப்டரை நிறுத்தி வைத்துள்ளோம். அமலாக்கத் துறை நடவடிக்கை அமெரிக்காவுடனான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் (MLAT) படி எடுக்கப்பட்டதாகவும்” என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்ட ஹெலிகாப்டர்

அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்ததும் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு பகுதிகளில் இந்த ஹெலிகாப்டர் தொடர்பான சோதனைகளை நடத்தி உள்ளது. அப்போதுதான் வர்த்தக கிடங்கு பகுதியில் ஹெலிகாப்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாதாந்திர வாடகை அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர் வாடகைக்கு விடப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. ஹெலிகாப்டர் முழு பறக்கும் நிலையில் இல்லாமல் பிரித்து பாகங்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. தேவைப்படும்போது அவற்றை ஒன்றாக சேர்த்துக் கொண்டு பறக்கும் நிலைக்கு கொண்டு வருவதற்கு அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உதிரிபாகங்கள் தனித்தனியாக பிரித்து தனித்தனி மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்தது விசாரணை அமைப்புகளை ஏமாற்றுவதற்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில், சமீபத்தில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான தி பேமிலி மேன்-2 வெப்சீரிசிலும் ஹெலிகாப்டரை பிரித்து வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்பது நினைவிருக்கலாம்.

English summary
The Enforcement Directorate (ED) has stooped a helicopter, owned by a Bangkok company and parked in Chennai, as rewuest made from US.

Source: https://tamil.oneindia.com/news/chennai/helicopter-seized-in-chennai-by-enforcement-directorate-for-request-from-us-437390.html