சென்னையில் வரும் 6-ந்தேதி அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் வரும் 6-ந்தேதி அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை, 

அ.ம.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் வருகிற நவம்பர் 6-ந்தேதி முதல் 3 நாட்கள் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி 6-ந்தேதி சென்னை, திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

7-ந்தேதி கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்ட நிர்வாகிகள், 8-ந்தேதி புதுச்சேரி, கர்நாடக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடக்கிறது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2021/10/31040921/Coming-to-Chennai-on-the-6th-AIADMK-Meeting-of-District.vpf