சென்னை வியாசர்பாடியில் குடிபோதையில் நீலகிரித் தைலம் குடித்தவர் உயிரிழப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை வியாசர்பாடியில் குடிபோதையில் நீலகிரித் தைலம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சென்னை வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 57 இவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார் இவர் நேற்று இரவு 10 மணி அளவில் இவரது பேரன் மித்திரன் என்பவருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது தொண்டை கரகரப்பாக உள்ளது என்று கூறி குழந்தையின் இருமல் மருந்து என்று நினைத்து அங்கு இருந்த நீலகிரி தைலத்தை தவறுதலாக குடித்து விட்டார். உடனடியாக இதுகுறித்து அங்கிருந்த உறவினர் ராமநாதன் என்பவரிடம் கூறியுள்ளார் உடனடியாக அவரை ராமநாதன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வேரோடு சாய்ந்த மரம் சாய்ந்து விபத்து - பெண் காவலர் பலிசென்னை தலைமைச் செயலகத்தில் வேரோடு சாய்ந்த மரம் சாய்ந்து விபத்து – பெண் காவலர் பலி

குடிபோதை

தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் இறந்துவிட்டார். இறந்துபோன ராஜசேகர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசுக்கடை கோரவிபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பட்டாசு கடை தீ விபத்தின்போது சிலிண்டர் வெடித்து சிதறும் காட்சியில் சிறுவன் சுமார் 50 அடி தொலைவிற்கு தூக்கி வீசப்பட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

எட்டு பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த இருபத்தி ஆறாம் தேதி அன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் பட்டாசு கடை தீ விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சங்கராபுரம் பட்டாசுக்கடை கோரவிபத்து சிசிடிவி காட்சிகள்

வெடிபொருட்கள் விற்பனை

அந்த சிசிடிவி காட்சிகளில் பட்டாசு கடையில் தடைசெய்யப்பட்ட வெடி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பட்டாசுக்கடை முழுவதுமாக இடிந்து விழும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்தநிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு பட்டாசு கடையில் தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

சிறுவன் காட்சி

இதுகுறித்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டாசு கடை உரிமையாளரான செல்வகணபதி கைது செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர் . மேலும் பட்டாசு விபத்து அன்று சிலிண்டர்கள் வெடித்து சிதறும் காட்சியில் சிறுவன் சுமார் 50 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

English summary
A person who drank Nilgiri balm while drunk died in Vyasarpadi, Chennai

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-a-person-who-drank-nilgiri-balm-died-in-vyasarpadi-437707.html