விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை – சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, விழுப்புரம், ராணிப்பேட்டை, நாமக்கல், கள்ளக்குறிச்சி திருச்சி, வேலூர் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.

விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி,டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் தீபாவாளி தினத்தன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விடாது தொடரும் கனமழை- சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! தமிழகத்தில் விடாது தொடரும் கனமழை- சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இந்த நிலையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல மாவட்டங்களில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, விழுப்புரம், ராணிப்பேட்டை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

English summary
Holidays have been declared for schools in 19 districts in Tamil Nadu due to heavy rains. Holidays have been declared for schools in Tiruvallur, Chennai, Chengalpattu, Kanchipuram, Pudukottai, Ariyalur, Perambalur, Cuddalore, Mayiladuthurai, Tanjore, Nagaon, Villupuram, Ranipettai and Namakkal districts due to heavy rains. The District Collector has ordered a holiday for schools and colleges in Ranipettai district today.

Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-district-collectors-announced-holidays-for-schools-in-13-districts-in-tamilnadu-437811.html