சென்னையில் 138.21 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் – சென்னை மாநகராட்சி – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்து 100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  • Share this:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 138.21 மெட்ரிக் டன் அளவிற்கு பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும்,மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது, மக்கள் வெடி வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். வாணவேடிக்கையால் சென்னை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது. பட்டாசு வெடிக்கும் நேரத்திற்கு பின் சென்னை முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. சிலர் அரசு அனுமதித்த நேரத்திற்கு பிறகு பட்டாசுகளை வெடித்தனர். இதுதொடர்பாக சில வழக்குகளையும் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் மாசு அளவு 150 என்ற குறியீட்டை கடந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 138. 21 மெட்ரிக் டன் அளவிற்கு பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது. நவம்பர் 5ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை 138.21 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சேகரிக்கப்பட்ட பட்டாசு குப்பைகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் சேகரிப்பு நிலையத்திற்கு 33 வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்து 100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H

First published:

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-138-metric-ton-cracker-waste-collected-in-chennai-hrp-606193.html