இனிதான் புயலே உருவாகப் போகிறது.. அதற்குள்ளேயே சென்னையில் ஏற்பட்ட துயர நிலை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் முன்பே சென்னையில் கடுமையான மழை பெய்துள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. ஒருநாள் இரவில் பெய்த பேய் மழை சென்னையின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது‌.

சென்னை மந்தைவெளியில் உள்ள பேருந்து நிலையம் மழைநீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

மக்களே உஷார்.. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை கொட்டும்.. சென்னை வானிலை மையம்!மக்களே உஷார்.. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை கொட்டும்.. சென்னை வானிலை மையம்!

வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன . தீபாவளிக்கு ஊருக்கு சென்ற மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சென்னை திரும்பி வருகின்றனர்.

எம் எம் டி காலனி

இந்த சூழலில் சென்னை எம்எம்டிஏ காலனி பகுதியில் சாலையில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் ஒரு பக்கமாக செல்கின்றன. இதன் காரணமாக அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெளியூர் சென்ற பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

ஈக்காட்டுத்தாங்கல்

சைதாப்பேட்டை பகுதியில் வெள்ள நீர் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது. இதேபோல் ஈக்காட்டுதாங்கல் பகுதியிலும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. சென்னை கோட்டூர் பகுதியில் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வழிந்து ஓடுகிறது. வில்லிவாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனங்களை பாதி அளவிற்கு மூழ்கும் அளவுக்கு சாலையில் வெள்ளநீர் மிகுந்து காணப்படுகிறது

சென்டர் மீடியன்கள்

ஒரு நாள் இரவு மழையை தாங்கும் அளவுக்கு சென்னையின் உள்கட்டமைப்புகள் இல்லை என்பது நிஜமான உண்மை. சாலையில் உள்ள சென்டர் மீடியன்கள் பல்வேறு பகுதிகளில் வெள்ள தடுப்பாக அமைந்து சாலைகளில் வெள்ள நீர் தேங்கி அதற்கு காரணமாக உள்ளன. சாலையோரங்களில் வெள்ளங்கள் சென்று சேர்வதற்கு ஏற்ப வடிகால் அமைப்புகள் இன்னும் பல இடங்களில் இல்லை. இதனால் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் அப்படியே தேங்கி நின்று விடுகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் , புழல் சென்னைக்கு நீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் கிட்டத்தட்ட முழு அளவை எட்டும் நிலையில் உள்ளன. வரும் 9ஆம் தேதி தான் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்தால் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஞாயிறு

சென்னை மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து பயன்பாட்டை குறைவாகவே பயன்படுத்துவார்கள். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகள் வெறிச்சோடி தான் காணப்படும். அழுவதற்கு செல்வதோ வெளியிடங்களுக்கு செல்வதை குறைவாகவே இருக்கும். அந்த வகையில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் போக்குவரத்து நெரிசல் பெரிதாக ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு பலரும் திரும்பி வருவதால் அந்த பகுதிகளில் மட்டும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னையில் நேற்று இரவு ஒரு நாள் பெய்த மழை மீண்டும் தொடர்ந்தால் என்ன நிலை ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

English summary
Heavy rains lashed Chennai even before the new cyclone formed. Due to heavy rains throughout the night, flood waters have accumulated in various parts of Chennai. One night the heavy rain has severely affected the normal life of Chennai‌.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-rains-still-cyclones-are-yet-to-come-in-chennai-438151.html