சென்னையில் சிவப்பு சம்பவம்.. 2015-ஏ தேவலாம்.. வடசென்னையில் இன்னும் கனமழை தொடரும்.. வெதர்மேன் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: வடக்கு மற்றும் மத்திய சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இன்று பெய்து வரும் மழை மிக அதிகமான அளவு என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள்.. நீர் வரத்து அதிகரிப்பு- இன்று தண்ணீர் திறக்க முடிவுவேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள்.. நீர் வரத்து அதிகரிப்பு- இன்று தண்ணீர் திறக்க முடிவு

கிட்டதட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் குளிர் பிரதேசங்களாக மாறியுள்ளன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போதே தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது.

வங்கக் கடல்

சென்னையில் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக் கடல் அருகே வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை- நெல்லூர் பெல்ட் வரை நேற்றும் இன்றும் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்தார். அதன்படி நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

புறநகர்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை கொட்டி வருகிறது. இன்று அதிகாலையும் விடாமல் பெய்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இன்று பெய்யும் மழை வடசென்னை மற்றும் மத்திய சென்னை வரை மிக அதிக மழை பெய்துள்ளது.

நுங்கம்பாக்கம்

இன்னும் மேகங்கள் அந்த பகுதிகளின் பக்கமாக நகர்ந்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக காலை 7.30 மணி நிலவரப்படி 207 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் 294 மி.மீ. மழையும் 2016 ஆம் ஆண்டு 150 க்கு மேற்பட்ட மி.மீ. மழையும் 2017 ஆம் ஆண்டு 183 மி.மீ. மழையும் 2020 ஆம் ஆண்டு 162 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அம்பத்தூர்

அது போல் மயிலாப்பூரில் 205 மி.மீ., அம்பத்தூரில் 205 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இது அதிகபட்ச மழையாகும். மேலும் அதிகமான மழை பெய்யும் எண வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் சென்னையில் இதுதான் அதிகபட்ச மழை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says that heaviest rains in Chennai Since 2015.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-weatherman-says-that-heaviest-rains-in-chennai-since-2015-438147.html