சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை.. முதல்வர் ஸ்டாலின் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை எழிலகத்தில் பேரிடர் மைய கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டரும், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.20 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னை நகரில் குறிப்பாக மிக அதிக அளவு மழை பதிவாகி பெய்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனடி உபரி நீர் திறப்பு- சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளம்!செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனடி உபரி நீர் திறப்பு- சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளம்!

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று கொளத்தூர், செல்வி நகர், சீனிவாசா நகர், பெரம்பூர், பெருமாள்பேட்டை, வல்லம் பங்காரு தெரு, புரசைவாக்கம், மூக்கு செட்டி தெரு, கொசப்பேட்டை, படவட்டமன் தெரு, ஓட்டேரி, கொன்னூர், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து கே. ஆர். எம் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ரொட்டி, அரிசி போர்வை, சோப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினேன்.

இயல்பான மழை

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை 334.64 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 232.8 மி.மீட்டரை விட 44 சதவீதம் கூடுதல் ஆகும். கோவை, நெல்லை, அரியலூர், திருவள்ளூர், விழுப்புரம், ஈரோடு, கரூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது.

நிவாரண முகாம்கள்

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், அனைத்து மாவட்டங்களில் 5,106 நிவாரண முகாம்களும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில், மொத்தம் 160 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தேசிய பேரிடர் மீட்பு படையின் இரு குழுக்கள் மதுரைக்கும் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக பேரிடர் மீட்புப் படையின் இரு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு தீயணைப்புத் துறையும் அனைத்து விதமான தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. மீன்வளத் துறை மூலம் போதுமான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆய்வு

இந்த நிலையில் இன்று சென்னையின் பல பகுதிகளிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காத வண்ணம் வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறை அமைப்புகள் மூலம் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொளளப்பட வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான மையங்களுக்கு அழைத்துச் செல்லவும், அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான இதர வசதிகளை செய்து தரவும் உத்தரவிட்டுள்ளேன். எல்லா இடங்களிலும் உரிய மருத்துவ வசதிகள் கிடைப்பதையும் கோவிட் வழிகாட்டு நடைமுறைகள் தவறாது கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இரு நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம தெரிவித்துள்ளதாலும் நவம்பர் 8, 9 ஆகிய இரு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அழைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொதுமக்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறும் உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

English summary
Heavy rain in Chennai: CM Stalin announces School holiday for 2 days for 4 district.

Source: https://tamil.oneindia.com/news/chennai/cm-announces-school-holiday-for-2-days-for-4-districts-438182.html