மக்களே உஷார்.. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை கொட்டும்.. சென்னை வானிலை மையம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மேலும் 3 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

ரொம்ப முக்கியம்.. தமிழ்நாட்டில் 3 மணி நேரத்திற்கு மழை பிச்சு எடுக்க போகிறது- வானிலை மையம் எச்சரிக்கைரொம்ப முக்கியம்.. தமிழ்நாட்டில் 3 மணி நேரத்திற்கு மழை பிச்சு எடுக்க போகிறது- வானிலை மையம் எச்சரிக்கை

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், ஈரோடு, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.

புறநகர் பகுதி

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை அதிகாலை முதல் நீடித்து வருகிறது. முன்னெப்பேதும் இல்லாத அளவுக்கு இந்த மழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 200 மி.மீ. மழை அளவை தாண்டியுள்ளது.

வாகனங்கள்

இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என அறிவித்துள்ளது.

வெள்ளம்

ஏற்கெனவே பெய்த மழைக்கே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேடு பள்ளம் தெரியாத நிலை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் இந்த மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தண்ணீரில் செலுத்த முடியாமல்

இரு சக்கர வாகனங்களை தண்ணீரில் செலுத்த முடியாமல் நீண்ட தூரத்திற்கு தள்ளிக் கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அதன் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கி விடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.

English summary
Chennai Meteorological Department says that 13 districts get heavy rain in 3 hours.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-and-13-districts-gets-more-rain-for-3-hours-438150.html