இந்த வருஷத்திலேயே இதுதான் அதிகமாம்.. சென்னையில் எவ்வளவு மழை பெய்தது? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் இந்த வருடம் பெய்ததிலேயே இதுதான் மிக அதிக பட்ச மழை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

நேற்று காலையில் இருந்தே சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தீவிரம் எடுத்த மழை அதிகாலை வரை விடமால் பெய்து வருகிறது. காலை 3 மணி வரை சென்னையில் 189 மிமீ மழை பெய்துள்ளது.

2015ஐ கண் முன் நிறுத்திவிட்டது.. சென்னையில் இரவு முழுக்க விடாமல் பெய்த மழை.. இந்த வீடியோவை பாருங்கள்2015ஐ கண் முன் நிறுத்திவிட்டது.. சென்னையில் இரவு முழுக்க விடாமல் பெய்த மழை.. இந்த வீடியோவை பாருங்கள்

வடபழனி, நுங்கம்பாக்கம், தி நகர், போரூர், வளசரவாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை என்று சென்னையின் முக்கிய பகுதிகளில் எல்லாம் மிக தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னை தவிர்த்து திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, கரூர், ,தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை

சென்னையில் இந்த வருடம் பெய்ததிலேயே இதுதான் மிக அதிக பட்ச மழை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். காலை 5 மணி வரை தீவிர கனமழை பெய்துள்ளது. இப்போதைக்கு மழை நிற்பது போலவும் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வில்லிவாக்கம்

சென்னையில் வில்லிவாக்கத்தில் 162 மிமீ மழை பெய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் நுங்கம்பாக்கத்தில் 145 மிமீ மழை பெய்துள்ளது. புழல் பகுதியில் 111 மிமீ மழை பெய்துள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது காலை 5 மணி வரையிலான நிலவரம்தான்.

தீவிர கனமழை

5 மணிக்கு பின்பும் சென்னையில் தீவிர கனமழை பெய்தது. சென்னையில் இப்போதைக்கு மழை விடுவதற்கான அறிகுறி தெரியவில்லை என்று தனியார் வானிலை கணிப்பு மையமான சென்னை ரெய்ன்ஸ் பக்கம் தெரிவித்துள்ளது. அதில், சென்னையில் இருந்து தீவிர மழை மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

எப்போது நிற்கும்?

ஆனால் தீவிர மழை மொத்தமாக நின்றுவிடாது. இப்போதைக்கு மழை நிற்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்று கூறியுள்ளது. இதனால் மக்கள் அவசியம் இன்றி வெளியே போக வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Heaviest rains of the year in Chennai says Tamilnadu Weather man on midnight rain in the state capital.

Source: https://tamil.oneindia.com/news/chennai/heaviest-rains-of-the-year-in-chennai-says-tamilnadu-weather-man-on-midnight-rain-438145.html