வரவேண்டாம்.. கேட்டுக்கொண்ட முதல்வர்.. மீறி படையெடுத்த மக்கள்.. சென்னை புறநகரில் கடும் டிராஃபிக்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையை நோக்கி பல மாவட்டங்களில் இருந்து மக்கள் திரும்பி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்த 2-3 நாட்களுக்கு வர வேண்டாம் என்று நேற்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்ட நிலையிலும் மக்கள் தொடர்ந்து சென்னை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது.

இன்றும் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களுக்கு தீவிர கனமழை எச்சரிக்கை!அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களுக்கு தீவிர கனமழை எச்சரிக்கை!

கனமழை

அதேபோல் தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே மழை தொடங்கிவிட்டது. சென்னையிலும் மழை பெய்து வருகிறது.

சென்னை

சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் மழைக்கு இடையிலும் சென்னையை நோக்கி பல மாவட்டங்களில் இருந்து மக்கள் திரும்பி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காட்டாங்குளத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. தீபாவளி விடுமுறைக்கு பின் பலர் சென்னை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். சென்னையில் இன்று அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல் தனியார் அலுவலகங்கள் முடிந்த அளவு விடுமுறை அல்லது வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

தனியார்

ஆனாலும் இன்று சென்னையில் பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை நோக்கி திரும்ப தொடங்கி உள்ளனர். இதன் காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை நோக்கி செல்லும் சில ரயில்கள் வெள்ளம் காரணமாக முந்தைய நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

அவதி

இதனால் மக்கள் பலர் உரிய நேரத்தில் சென்னை செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சாலைகளில் வெள்ளம் தேங்கி உள்ள நிலையில் சென்னைக்கு அடுத்த 2-3 நாட்களுக்கு வர வேண்டாம் என்று நேற்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்ட நிலையிலும் மக்கள் தொடர்ந்து சென்னை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

English summary
Chennai flood; Heavy traffic in many areas as people are coming back from their home town after Deepavali Holiday.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-flood-heavy-traffic-in-many-areas-as-people-are-coming-back-from-their-home-town-438236.html