ChennaiRains: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. மூன்று சுரங்கப்பாதைகள் மூடல் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை மழை

சென்னையில் மழைநீர் பெருக்கு காரணமாக மூன்று சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

  • Share this:
கனமழை காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இதன்காரணமாக பகுதிகளில் மழைநீர் சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது. மழைநீர் பெருக்கு காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து  காவல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை போக்குவரத்து நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள்:

மழைநீர் பெருக்கு காரணமாக வியாசர்பாடி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, காக்கன் சுரங்கப்பாதை (மூலக்கொத்தளம்  – கொருக்குப்பேட்டை) மூடப்பட்டுள்ளன.

சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்:

  • பெரம்பூர் பேரக்ஸ் ரோடு X ஸ்டரகான்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷன் (ஆர்த்தி அப்பார்ட்மெண்ட்ஸ்) நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஸ்டரகான்ஸ் ரோடு மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்படுகின்றன.
  • நசரத்பேட்டை நீதிமன்றம் அருகில் நீர் தேங்கி உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யவில்லை.
  • K-5 பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 70 அடி சாலையில் நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • டிமலஸ் சாலை – புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் நீர் உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை.

சாலையில் பள்ளம்

திருமுலைப்பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணி மஹால் – பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. வள்ளூவர் கோட்டத்தில் இருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமுலைப்பிள்ளை ரோட்டில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H

First published:

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-traffic-has-been-diverted-in-chennai-due-to-heavy-rains-hrp-608737.html