ஃபுல் ஸ்விங்கில் ஊழியர்கள்.. 14 சுரங்கப்பாதைகள், 240 இடங்களில் மழைநீர் அகற்றம்: சென்னை மாநகராட்சி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 3 நாட்களாக விடிய விடிய கொட்டிய மழைநீர் தேங்கிய 400 இடங்களில், 240 இடங்களில் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டி வருகிறது.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்துவிட்டதால், அவைகளை அகற்ற குடியிருப்பு மக்கள் போராடி வருகிறார்கள்.. இதில் வடசென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாகவே தூங்காமல் விடிய விடிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..

வாட்ஸ் அப் செயலி மூலம் பெறப்படும் புகார்களை நீக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கைவாட்ஸ் அப் செயலி மூலம் பெறப்படும் புகார்களை நீக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை

பொதுமக்கள்

சிலர் தங்கள் உடைமைகளை அப்படி அப்படியே விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். அதேசமயம், மாநகராட்சி ஊழியர்களும் 3 நாட்களாகவே மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாழ்வான தெருக்கள், சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மட்டுமே, மாநகராட்சி சார்பில் அலுவலர்கள், பணியாளர்கள் என மொத்தம் 23 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முகாம்கள்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மாநகராட்சி சார்பில் உணவு பரிமாறப்பட்டுள்ளது… மோட்டார்களை வைத்து வீடுகளுக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ள நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..

மழைநீர்

அவர்களுக்கு உணவு வழங்குவதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய சமையலறைகள் 15 இடங்களில் தயார் நிலையில் உள்ளதால், மிகப்பெரிய சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது… மேலும், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 14 சுரங்கப்பாதைகளில் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி தகவல் கூறியுள்ளது..

பொட்டலங்கள்

தொடர்மழையால் சென்னை நகரில் விழுந்த 116 மரங்களும் அகற்றப்பட்டதாகவும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 7,180 புகார்களில் 3,593 புகார் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி விளக்கம் தெரிவித்துள்ளது.. சென்னை மாநகராட்சி சார்பில் நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Rain: The Chennai Corporation, which is in full swing, has 23 thousand people involved in the rescue operation

Source: https://tamil.oneindia.com/news/chennai/rain-the-chennai-corporation-which-is-in-full-swing-has-23-thousand-people-involved-in-the-rescue-438485.html