எங்கெல்லாம் பள்ளங்கள் உருவாகியுள்ளன? சென்னை போக்குவரத்து காவல் தகவல் – தினமணி

சென்னைச் செய்திகள்

எங்கெல்லாம் பள்ளங்கள் உருவாகியுள்ளன?  சென்னை போக்குவரத்து காவல் தகவல்

சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக, முக்கிய சாலைகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சில சாலைகளில் திடீர் பள்ளங்கள் காரணமாக வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் இது குறித்து தகவல் அறிந்து கொண்டு, மாற்றுப் பாதைகளைத் தேர்வு செய்யும் வகையில், எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ளது.

அது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.

1. மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதை:
i) மேட்லி சுரங்கப்பாதை

2. சாலையில்பள்ளம்:-

திருமலைப்பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர்கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

வாணிமஹால் – பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவர்கோட்டத்தில் இருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.

3. மரங்கள் எதுவும் விழவில்லை.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/nov/10/where-do-the-grooves-form-chennai-traffic-police-information-3732734.html