நீதிமன்ற காலிப் பணியிடங்கள்: உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எச்சரிக்கை! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • சென்னை உயர் நீதிமன்றம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக வேலைவாய்ப்பு விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ளன
  • வேலை வாங்கித் தருவதாக பணம் பறிக்கும் மோசடிக் கும்பலும், புரோக்கர்களும் களம் இறங்கியுள்ளனர்
  • பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த காலிப் பணியிடங்களை இந்த ஆண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்காக சென்னை உயர் நீதிமன்றம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக வேலைவாய்ப்பு விளம்பரங்கள் அளிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் பறிக்கும் மோசடிக் கும்பலும், புரோக்கர்களும் களம் இறங்கியுள்ளனர். ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதால் எப்படியாவது வேலையை பெற்று விட வேண்டும் என வேலை இல்லாமல் தவிக்கும் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ஆர்வத்தை பயன்படுத்திக் கொள்ளும் இக்கும்பல், அவர்களை தவறாக வழிநடத்தி, பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி நம்பவைத்து ஏமாற்றி, பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இனி நாட்டமை டூ பங்காளி… பருவமழையில் வீசும் ஆதரவு காற்று: புது ரூட்டில் சசிகலா!
இந்த நிஅலியில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி நியமனங்களாக நிரப்பப்படுகின்றன. இந்த நீதிமன்ற பணியிடங்கள் அனைத்தும் முழுவதுமாக தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும்.

தலைமை பதிவாளர் எச்சரிக்கை

தலைமை பதிவாளர் எச்சரிக்கை

இருப்பினும், இதை பயன்படுத்தி வேலைக்காக காத்திருக்கும் நபர்களிடம் சில மோசடி நபர்கள் பணியிடங்களை பெற்று தருவதாக கூறி மோசடி செய்வது தெரிய வந்துள்ளது. இத்தகைய மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். பணி நியமனங்களை பெற்று தருவதாக கூறும் நபர்களை பொதுமக்கள், வேலை தேடும் நபர்கள் நம்ப வேண்டாம். மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி குற்றப்பிரிவு காவல்துறை இயக்குனரிடம் புகார் அளிக்கலாம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/madras-hs-registrar-warns-about-recruitment-process-in-court-vaccancies/articleshow/87630438.cms