சென்னையில் இரவு முழுக்க பெய்த பேய் மழை.. இன்னும் விடவில்லை.. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் இரவு முழுக்க பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போதும் மழை தொடர்ந்து விடாமல் பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக உருமாறி உள்ளது. இன்று இந்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளது.

இன்று மாலை காரைக்காலுக்கு ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். இதனால் வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முழுக்க விடிய விடிய மழை பெய்தது.

சென்னை மக்களே உஷார்.. வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக வரும் விஷ ஜந்துக்கள்.. பாதுகாப்பா இருங்க!சென்னை மக்களே உஷார்.. வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக வரும் விஷ ஜந்துக்கள்.. பாதுகாப்பா இருங்க!

சென்னை

சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை விடாமல் இப்போது வரை பெய்து கொண்டு இருக்கிறது. இரவு முழுக்க மழை பெய்த காரணத்தால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை காரணமாக அதிக வெள்ளம் ஏற்பட்ட, தி நகர், வேளச்சேரி பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

எங்கு பெய்தது

சென்னையில் வேளச்சேரி, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. . ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

லேசான மழை

மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மழையால் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல்தான் சென்னையில் மழை தீவிரம் எடுக்கும். பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

எங்கு எவ்வளவு

காலை 4.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 13.6 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது. இந்த பகுதிகள்தான் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

  • செய்யூர் (சிஜிஎல்) – 79.0 மி.மீ
  • மீனம்பாக்கம் – 96.0 மி.மீ
  • குட் வில் பள்ளி, வில்லிவாக்கம் (டிவிஎல்) – 105.5 மி.மீ
  • எம்ஆர்சி நகர் – 131.5 மி.மீ
  • திரூர் (டிவிஎல்) – 88.5 மி.மீ
  • ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (கேஎன்சி) – 113.5 மி.மீ
  • தரமணி – 119.0 மி.மீ
  • கட்டப்பாக்கம் (டிவிஎல்) -91.0 மி.மீ
  • மேற்கு தாம்பரம் – 83.5 மி.மீ
  • சத்யபாமா பல்கலைக்கழகம் (கேஎன்சி) – 106.0 மி.மீ
  • கயத்தார் (TTK) –48.5 மி.மீ
  • ஆரணி (டிவிஎம்) -18.5 மி.மீ

English summary
Chennai Flood: Heavy rain is pouring in and around the city the whole night. Flood in many areas.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-flood-heavy-rain-is-pouring-in-and-around-the-city-the-whole-night-438598.html