வெள்ளநீரில் மிதக்கும் சென்னை.. மக்களை தேடி வீட்டுக்கே வருகிறது நடமாடும் மருத்துவ முகாம்கள்.. சூப்பர் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் மறுநாள் காலை வரை விடாமல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. 2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் மிக அதிக மழை பெய்துள்ளது.இதனால் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடானது.

எழும்பூர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி என நகரின் முக்கிய இடங்களும், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் பேய் மழை கொட்டியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கின.

சென்னை, கடலூர், புதுவை.. 3 பேரும் இங்க வாங்க.. நவம்பரும், டிசம்பரும் மன்னிப்பு கேட்கணுமாம்!சென்னை, கடலூர், புதுவை.. 3 பேரும் இங்க வாங்க.. நவம்பரும், டிசம்பரும் மன்னிப்பு கேட்கணுமாம்!

சென்னையில் வெள்ளம்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். பல இடங்களில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் அவர்களை படகுகள் மூலம் மீட்டனர். ஆனாலும் சென்னையில் இன்னும் மழை நின்றபாடில்லை. பல இடங்களில் வெள்ளநீர் வடியாத சூழ்நிலை நிலவுகிறது.

நடமாடும் மருத்துவ முகாம்கள்

மழை, வெள்ள பாதிப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக களமிறங்கி ஆய்வு செய்து வருகிறார். தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் முதல்வர் ஆய்வு செய்தார். அதிகாரிகளும் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 1,150 மழைக்கால நடமாடும் மருத்துவ முகாம்களை மக்கள் பயன்பாட்டிற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடியைத்து துவக்கி வைத்தார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன்

முன்னதாக பேரிடர் காலங்களில் மக்களுக்கு அளிக்கக்கூடிய சிகிச்சை, கொரனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தி.மு.க எம்.பி டி.ஆர் பாலு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது:-

நடமாடும் மருத்துவ முகாம்கள்

தமிழகத்தில் கனமழை பெய்யும் இந்த காலத்தில் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கபட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,858 மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளன. 965 நடமாடும் மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க அயப்பாக்கம் மருத்துவ ஆரய்ச்சி நிறுவனத்தில் இருந்து 1150 நடமாடும் மருத்துவ வாகனம் துவங்கபட்டு உள்ளது.

முகாமுக்கு வராவிட்டாலும் வீட்டிற்கே சென்று உணவு வழங்கு ஏற்பாடு – அமைச்சர் மெய்யநாதன்

காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும்

120 கோடி ரூபாய் செலவில் மருந்து மாத்தரைகள் அரசிடம் கையிருப்பில் உள்ளது. மழைகாலம் முடியும் வரை காய்ச்சிய குடிநீரை மக்கள் பயனபடுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் மாவட்ட அலுவலர்கள் பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரின் குளோரின் அளவை கணக்கிட வேண்டும். வீடுகளுக்கு தேடி சென்று மக்களுக்கு மருத்துவம் அளிக்க செயல் தொடர்ந்து நடைப்பெறும். 6 கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர் என்கிற இலக்கை தமிழகம் எட்டியுள்ளது.

அவசர சிகிச்சை ஊர்திகள் தயார்

டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சுகாதார துறை எடுத்து வருகிறது. வடசென்னையில் மழைநீர் தேங்கி நிற்க்கும் பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மழை காலங்களில் முகாம்களில் தங்க வைக்கபட்டு உள்ள மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 1,303 அவசர சிகிச்சை ஊர்திகள் தயார் நிலையில் இருக்கின்றன. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

English summary
Health Minister Ma Subramaniam flagged off 1,150 monsoon mobile medical camps in Chennai for public use. He said 1,303 ambulances were on standby at all government hospitals in Chennai

Source: https://tamil.oneindia.com/news/chennai/tn-health-minister-ma-subramaniam-flagged-off-1-150-mobile-medical-camps-in-chennai-438563.html