சென்னை வெள்ள பாதிப்பு பற்றி தாமாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! காரணம் என்ன தெரியுமா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை சீராக்க தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கைகைள் எடுத்துவருவதாக குறிப்பிடுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன், தாமாக முன்வந்து வழக்கை எடுக்கவும் மறுத்துவிட்டது.

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் கடுமையாக உள்ளதாகவும், உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்றும் எனவே உயர்நீதிமன்றம் தலையிட்டு தானாக முன்வந்தது வழக்கு தொடரவேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முறையீடு செய்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலிக்கப்பட்டது.

ஆச்சரியம்.. தமிழ்நாட்டில் இயல்பை விட 54 சதவீதம் மழை அதிகம்.. சென்னைக்கு கூடுதலாக 77% மழை ஆச்சரியம்.. தமிழ்நாட்டில் இயல்பை விட 54 சதவீதம் மழை அதிகம்.. சென்னைக்கு கூடுதலாக 77% மழை

தலைமை நீதிபதி

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, மழை வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய தமிழக அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்துவருகிறதாக குறிப்பிட்டு, அவை செயல்படுவதற்கு முழுவதும் அனுமதிக்க வேண்டும் என விளக்கம் அளித்தனர்.

தலையிட முடியாது

ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு பெய்த கனமழை நேற்றுதான் ஓய்ந்தள்ளது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வருவதை குறிப்பிட்டு, தற்போதை நிலையில் அரசின் பணியில் தலையிட முடியாது என கூறி தாமாக முன்வந்து பொது நல வழக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.

ஸ்டாலின் ஆய்வு

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் 5வது நாளாக இன்றும் மழை பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து வருகிறார். டீ சாப்பிடபடியே டீ கடைக்கு வந்தவர்களிடம் அவர் மழை நீர் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

சசிகலா ஆய்வு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா, இன்று தி.நகரிலுள்ள கிரியப்பா சாலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். தமிழகத்திற்கு தேவையான நிதியினை உடனடியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும், மீண்டும் இப்படி வெள்ளச் சூழல் ஏற்படாதவாறு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்திற்கு தேவையான உரிய நிவாரணத்தை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று சசிகலா தெரிவித்தார்.

English summary
Chennai flood: The Chennai High Court has said that the Tamil Nadu government and the Chennai corporation are taking steps to mitigate the effects of the floods, and refused to take up suo moto case.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-flood-the-chennai-high-court-refused-to-take-up-suo-moto-case-438753.html