4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் – செந்தில்பாலாஜி சொன்ன குட்நியூஸ் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் வடிந்த பின்னர் படிப்படியாய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

image

4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் – செந்தில்பாலாஜி சொன்ன குட்நியூஸ்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மழைநீர் பாதிப்பு குறைந்தவுடன் விரைவில் அனைத்து இடங்களிலும் மின்இணைப்பு வழங்கப்படும் என்று கூறினார். சென்னையில் 4,000 பணியாளர்கள் தமிழகம் முழுவதும் 36,000 பணியாளர்கள் என இரவு முழுவதும் மின் இணைப்பு பணிகளில் மின்சார வாரிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அனைத்து பகுதிக்கும் மின் இணைப்புகள் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 6 நாட்களாகவே கன மழை கொட்டித்தீர்த்தது. சென்னை மாநகரமே வெள்ளக்காடானது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்கசிவினால் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த 5 நாட்களாகவே மக்கள் மழை வெள்ளநீரிலும் இருளிலும் தவித்து வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கடும் மழையினால் பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு மின்வினியோகம் உடனடியாக வழங்குவது தொடர்பாக, தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், மற்றும் செயற் பொறியாளர்கள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கனமழையால் சென்னையில் மின் சேவை பாதிப்பு.. எப்போது சீராகும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்கனமழையால் சென்னையில் மின் சேவை பாதிப்பு.. எப்போது சீராகும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்

மழை வெள்ளத்தால் பாதிப்பு

செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வடகிழக்கு பருவ மழையால் சென்னையிலுள்ள 223துணை மின் நிலையங்களில், 221 துணை மின் நிலையங்கள் செயல்பாட்டில் இருந்தது பருவமழை பாதிப்பால், 2 துணை மின் நிலையங்கள் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறினார்.
இன்று கோடம்பாக்கம் துணை மின் நிலையம் சரிசெய்யப்பட்டு விநியோகத்திற்கு தொடரப்பட்டுள்ளது கொண்டுவரப்பட்டுள்ளது, துணை மின் நிலையத்தில் மழை நீர் சூழ்ந்திருப்பதால் மழைநீர் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மழை நீர் அகற்றப்பட்டு வெள்ளம் வடிந்த பகுதிகளில் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.

மின்சாரம் துண்டிப்பு

இன்று காலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மழைநீர் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட செந்தில் பாலாஜி, “சென்னையில் 66ஆயிரம் மின் இணைப்பு தரகளுக்கு மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு , 38ஆயிரம் இணைப்புதாரர்களுக்கு தற்போது மீண்டும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் மின் விநியோகம்

நிறுத்தப்பட்டுள்ள மீதமுள்ள 28 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக கூறினார். கடந்த 2015 – 16 ஆம் ஆண்டுகளில் தடைபட்ட மின்சாரம் இரண்டு வார காலத்துக்குப் பிறகே சரியானது . ஆனால் தற்போது உடனுக்குடன் மின்சாரம் சீர்செய்யப்பட்டு மக்களுக்கு மின்வினியோகம் அளிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி அதிகரிப்பு

மழை பாதிப்பால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் விதமாக தூத்துக்குடி ,மேட்டூர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது . இன்று பிற்பகல் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும்.

மின்வாரிய அலுவலகங்களுக்கு அறிவிப்பு

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கூடுதலாக 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். இந்த உத்தரவு குறித்து அந்தந்த மின்வாரிய அலுவலகத்துக்கு இன்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படும்” என்றார்.

English summary
Minister Senthil Balaji has said that the public in Chennai, Kanchipuram, Chengalpattu and Tiruvallur districts affected by the floods will be given 15 days to pay their electricity bills.

Source: https://tamil.oneindia.com/news/chennai/time-to-pay-electricity-bills-in-flood-affected-chennai-kanchipuram-chengalpattu-and-tiruvallur-438728.html