சென்னை மக்களே வாகனத்தை எடுப்பதற்கு முன் இதைப் படியுங்கள் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

இது நவம்பர் 13ஆம் தேதி மதியம் 12 மணி நிலவரம்

வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் என்னவென்றால்..

1. மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்

வியாசர்பாடிசுரங்கபாதை
மேட்லிசுரங்கபாதை
காக்கன்சுரங்கபாதை( இருசக்கரவாகனம்மற்றும்ஆட்டோ)

2.மழைநீர் தேங்கியுள்ள சாலையின் பெயர் (போக்குவரத்து நடைபெறுகிறது)

கால்நடைமருத்துவமனை – வேப்பேரி சாலை மசூதி 
பிரிக்லின்சாலை
கடற்கரைசேவைசாலை (மூடப்பட்டது)
ஆர்.ஆர்ஸ்டேடியம்
என்எச் மற்றும் கேஎச் ஸ்டெர்லிங்ரோடு முதல் லயோலா கல்லூரி வரை
டிடிகே சாலை, எல்டாம்ஸ்சாலை, தபால்காலனி
ராம்தியேட்டர் – வடபழனி
பசுல்லாசாலை- வடக்குஉஸ்மான்சாலை
வாணிமஹால், ஜிஎன்செட்டி, விஆர்சாலை
அருணாச்சலம்சாலை
பிடி ராஜன், காமராஜ்சாலை
முகமதுசதக் கல்லூரி
ஜே10 குளோபல்மருத்துவமனை
மணலி எக்ஸ்பிரஸ் சாலை- சாத்தான்காடு முதல் எம்.எப்.எல். சந்திப்பு

இதையும் படிக்கலாமே.. 3வது அலை அச்சம்: பெங்களூருவில் சப்தமில்லாமல் நடக்கும் விஷயம்

3. மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது

செம்பியம் – ஜவஹர்நகர்
பெரவள்ளுர் – 70 அடிசாலை
வியாசர்பாடி – முல்லைநகர்பாலம்

4. மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு

மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் மட்டும் லஸ் வழியாக அனுப்பப்படுகிறது.

5. சாலையில் பள்ளம்

திருமலைப்பிள்ளைரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர்கோட்டம் நோக்கிவாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணிமஹால்–பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவர்கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.

6. மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்

பெரம்பூர் பேரக்ஸ் சாலை–அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாநகரப் பேருந்துகள் செல்லமுடியாத காரணத்தால் டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் மாநகரபேருந்துகள் பிரிக்கிளின்ரோடு, ஸ்டிராஹன்ஸ்ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும்.

அதேபோல் புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் ஸ்டிராஹன்ஸ்ரோடு, பிரிக்கிளின்ரோடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும்.

7. மரங்கள் ஏதும் விழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/nov/13/people-of-chennai-should-read-this-before-taking-the-vehicle-3734606.html