தென் சென்னை எப்போதும் வெள்ளத்தில் மிதப்பதற்கு காரணம் இதுதானா? – Vikatan

சென்னைச் செய்திகள்

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என்று பாகுபாடு இல்லாமல் மழை மொத்த சென்னையையும் புரட்டிப் போட்டிருக்கிறது. குறிப்பாக, தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, தரமணி, கீழ்க்கட்டளை, ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில் இன்னும் முழுமையாக வெள்ளம் வடிந்துவிடவில்லை. ஒவ்வொரு பருவ மழையின்போதும் வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகள் பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இவ்வளவுக்கும் வேளச்சேரி ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு மழைநீர் வடிந்து செல்லும் கால்வாய்கள்கூட கட்டப்பட்டிருக்கின்றன. இதற்குப் பிறகும் மழைநீர் வடியவில்லை.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

இதற்குக் காரணம் என்னவென்று நீர்நிலை ஆய்வாளரும் கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்தவருமான ஜெயஶ்ரீ வெங்கடேசனிடம் பேசியபோது, “2005-ம் ஆண்டு பெய்த பெருமழையிலிருந்தே சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து வருகிறோம். தென் சென்னை பகுதியின் முக்கிய நீர்வடிகாலாக இருந்து வருகிறது ஒக்கியம் மடுவு. ஆனால், இதன் மூலமாக மழைநீரை வெளியேற்ற வேண்டுமென்றால் அதற்குத் தடையாக பெருங்குடி குப்பைக் கிடங்கு இருந்து வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒருபகுதியை ஆக்கிரமித்து குப்பைக் கிடங்கு உருவாக்கப்பட்டது மாபெரும் வரலாற்றுப் பிழை. இதை முழுமையாக இங்கிருந்து அகற்ற வேண்டும் என்பது சூழல் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை. டைடல் பார்க், தரமணி, ஐ.ஐ.டி வளாகத்திலிருந்து வெளியேறும் மழைநீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒருபக்கம் வந்தடைகிறது.

Source: https://www.vikatan.com/government-and-politics/environment/how-south-chennai-affected-in-every-rainy-season-due-to-perungudi-dump-yard