சென்னையில் இருந்து செல்லும் 2 ரெயில் சேவை நிறுத்தம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை சென்ட்ரல்-விஜயவாடா (வண்டி எண்.02712) ரெயில் நவம்பர் 21ம் தேதி அன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு,

சென்னை சென்ட்ரல்-பித்ரகுந்தா (வண்டி எண்.07237) மற்றும் பித்ரகுந்தா-சென்னை சென்ட்ரல் (வண்டி எண்.07238)  ஆகிய ரெயில்கள் நவம்பர் 29ம் தேதி தொடங்கி டிசம்பர் 8ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல்-விஜயவாடா (வண்டி எண்.02712) மற்றும் விஜயவாடா-சென்னை சென்ட்ரல் (வண்டி எண்.02711)  ஆகிய ரெயில்கள் நவம்பர் 21ம் தேதி அன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக சென்னை மண்டல் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புறநகர் மின்சார ரெயில்களில் நாளை முதல் அனைத்து பிரிவு பயணிகளும் குறிப்பிட்ட கால வரையறை இன்றி எந்நேரமும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்தும்  பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் போன்றவற்றை இனிமேல் யூ.டி.எஸ் மொபைல் ஆப் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2021/11/14220419/Cancellation-of-trains-from-Chennai.vpf