சென்னை அணி வீரர்களுக்கு பாராட்டு விழா : முதல்-அமைச்சருக்கு அழைப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து சென்னை அணி வீரர்களுக்கு பாராட்டுவிழா விரைவில் நடத்தப்படும் என்று  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியிருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது மகேந்திர சிங் தோனி என முதல் -அமைச்சர்  மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் சிஎஸ்கே  அணி உரிமையாளர் சீனிவாசன் இன்று முதல்- அமைச்சர்  மு.க.ஸ்டாலினை  சந்தித்தார் . அதில் கலை  வாணர் அரங்கில் நடைபெறும் சென்னை அணி வீரர்களுக்கான   பாராட்டுவிழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி வருகிற நவம்பர் 20ம் தேதி நடைபெறுகிறது.  

Source: https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/11/16235932/Appreciation-Ceremony-for-Chennai-Team.vpf