ஹெவி ரெயின்.. சென்னையில் மீண்டும் வெளுத்து கட்ட போகும் மழை.. வெதர்மேன் அறிவிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னைக்கு பெரிய மழை காத்திருக்கிறது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.. குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகிவிட்டதால் இன்றைய தினம் சென்னை உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கு கனமழை உள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வடதமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிதீவிர கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களில் ஏற்கனவே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சென்னை மட்டுமல்ல.. இந்த உள் மாவட்டங்களுக்கும் கனமழை காத்திருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்சென்னை மட்டுமல்ல.. இந்த உள் மாவட்டங்களுக்கும் கனமழை காத்திருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

வெதர்மேன்

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. “வடதமிழக பகுதியில் மழை அதிகரிக்கும் முன், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில், நீலகிரி முதல் தூத்துக்குடி வரை பரவலாக மழை பெய்யும். கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களிலும், கன்னியாகுமரியின் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால், மேற்கில் இருந்து தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைமேகங்கள் நகர்ந்து வருகின்றன.

கடலோர மாவட்டங்கள்

கடந்த 2-3 மணி நேரமாக நெல்லை- தூத்துக்குடி பெல்ட்டில் மிகத் தீவிரமான மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை இருபுறமும் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு இடையில் இருக்கும் மாவட்டங்களில் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நாளைய தினம் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட உள்பகுதிகளில் மழை குறையும். கடலோர மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் மழை அதிகரிக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

வடதமிழகம்

இந்நிலையில், சென்னைக்கு பெரிய மழை காத்திருக்கிறது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.. குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகிவிட்டதால் இன்றைய தினம் சென்னை உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கு கனமழை உள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதீப்ஜான் தன்னுடைய ட்வீட்டில், மேற்கில் இருந்து வடமேற்கு திசைக்கு வடதமிழகத்துக்கும், தென் ஆந்திராவுக்கும் நடுவில் குறைந்த காற்றழுத்தம் நகர்கிறது என்றும் கூறியுள்ளார்.

மழைப்பொழிவு

இதன்காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். பெரிய பந்து போன்ற உருண்டையுடன் மேகக்கூட்டம் ஒன்று, வட தமிழகம் அல்லது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தென்படுகிறது என்றும் சென்னை – நெல்லூர் பெல்ட்டில் நல்ல மழைப்பொழிவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

English summary
Heavy Rain Chances to Chennai including Tiruvallur, Nellai, TN Weatherman tweet

Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-chances-to-chennai-including-tiruvallur-nellai-tn-weatherman-tweet-439407.html