சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

2 மாவட்டங்களிலும் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே நாளை காலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது 40-50 கி.மீ. வேகத்தில் கடற்கரை பகுதிகளில் காற்று வீசும் என்பதால், தென் மேற்கு வங்கக் கடல், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் நாளை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு 2 மாவட்டங்களிலும் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்பதால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Source: https://www.dailythanthi.com/News/State/2021/11/18221923/Red-Alert-withdrawn-for-Chennai-and-Tiruvallur-districts.vpf