சென்னையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் போக்குவரத்து மாற்றங்கள் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் போக்குவரத்து மாற்றங்கள்

சென்னையில் மழை காரணமாக நீர் தேங்கிநிற்பது, சாலைகளில் பள்ளம் ஏற்பட்டிருப்பது போன்ற காரணங்களால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று காலை 10 மணிக்கு  சென்னை  பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.

1. மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் :
பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தி.நகர், பசூல்லா சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஜி.என்செட்டிசாலை–வாணிமஹால் சந்திப்பிலிருந்து பசூல்லா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது.

சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கே.கே.நகர்  ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள்மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

பொது விவரம் :
சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இம்மழையின் காரணமாக தண்ணீர் தேங்குவதோ, மற்றும் எவ்வித போக்குவரத்து இடையூறும் இல்லை.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/nov/19/traffic-changes-made-in-chennai-3738294.html