சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளது: டோனி நெகிழ்ச்சி – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின் போதும் ரசிகர்கள் ஆதரவு மிகப்பெரியது என டோனி பேசினார்.

சென்னை,

2021- ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது.  முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.  பாராட்டு விழாவில் டோனி பேசியதாவது:-

பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிவிட்டு சென்னை வந்தேன். சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளது. கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகம். கிரிக்கெட்டை புரிந்து கொள்ள சென்னை பல விதங்களில் உதவியது. 

சென்னை அணியின் ரசிகர்கள் நாடு முழுவதும் உள்ளனர். 2008-ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்கு என்னை எடுப்பார்கள் என நினைக்கவில்லை. எனது கடைசி 20 ஓவர் போட்டி சென்னையில் தான் இருக்கும்” என்றார். 

Source: https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/11/20182611/Chennai-has-brought-back-fond-memories-Dhoni.vpf