குறிவைத்து வரும் யார்க்கர் பால்.. முரட்டுத்தனமான வங்ககடல் தாழ்வு பகுதி- சென்னை ரெய்ன்ஸ் எச்சரிக்கை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இது குறித்து தனியார் வானிலை ஆய்வு மையமான சென்னை ரெய்ன்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இரண்டு தாழ்வு பகுதிகள் தாக்கிவிட்டன. சென்னை, வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் இந்த தாழ்வு பகுதியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.

தென் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்தது. இந்த நிலையில்தான் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கால துணி காய வச்சிக்கலாம்.. தெற்கால குடைய கைல வச்சிக்கணும்.. சூப்பர் போஸ்ட் போட்ட வெதர்மேன்வடக்கால துணி காய வச்சிக்கலாம்.. தெற்கால குடைய கைல வச்சிக்கணும்.. சூப்பர் போஸ்ட் போட்ட வெதர்மேன்

காற்றழுத்த தாழ்வு பகுதி

இன்று இரவுக்குள் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகரும். இதனால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை மற்றும் தென் தமிழகம் ஒட்டி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் வடக்கு அல்லது டெல்டா மாவட்டங்களை ஒட்டி இது கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை ரெயின்ஸ்

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இது குறித்து தனியார் வானிலை ஆய்வு மையமான சென்னை ரெய்ன்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. chennairains.com பக்கத்திலும் அவர்களின் ட்வீட்டர் பக்கத்திலும் இது தொடர்பான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

யார்க்கர்

அவர்களை வெளியிட்டுள்ள அப்டேட்டில், தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 26ல் இருந்தே வடகிழக்கு பருவமழை கிரிக்கெட்டில் பந்து வீசும் பாஸ்ட் பவுலர் போல செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஓவருக்கு ஒரு யார்க்கர், பவுன்சர் வீடும் பவுலர் போல செயல்படுகிறது. கடந்த நவம்பர் 7, 11, 18 தேதிகளில் வடகிழக்கு பருவமழை நல்ல சிறப்பான யார்க்கர்களை குறி வைத்து வீசியது. இதில் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி பல உள் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டது.

பல மாவட்டங்கள்

அதேபோல் தெற்கு கர்நாடகாவின் உள் மாவட்டங்களுக்கும், ஆந்திர பிரதேசமும் இதனால் பாதிக்கப்பட்டது. ஒரு பேட்ஸ்மேனில் வீக்னஸ் தெரிந்தால் எப்படி பவுலர் யார்க்கராக வீசுவாரோ அப்படிதான் வங்கக்கடல் வட தமிழ்நாட்டின் வீக்னஸை கண்டுபிடித்துவிட்டது போல. வரிசையாக தாழ்வு பகுதிகள் மூலம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வங்கக்கடல் எடுத்து வருகிறது

அடுத்த ஓவர்

இந்த வார இறுதியில் வர கூடிய மழையும் இந்த சீசனில் அடுத்த சிறப்பான ஓவராக அமைய போகிறது. வங்கக்கடல் மீண்டும் இந்த வார இறுதியில் யார்க்கர் பந்து ஒன்றை தமிழ்நாட்டை நோக்கி போட போகிறது என்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து சென்னை ரெய்ன்ஸ் கூறியுள்ளது. அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மீண்டும் வடதமிழ்நாடு கனமழையால் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.

டெல்டா

கிழக்கு இலங்கையில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி, தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதற்கு முன் சென்னை வடக்கு பகுதியில் கரையை கடந்த தாழ்வு மண்டலம் உருவான அதே இடத்தில் இதுவும் உருவாகி வருகிறது. 2020ல் வந்த நிவர் புயல், புரேவி புயலின் வடமேற்கு நகர்வை இதுவும் கொண்டு இருக்கிறது. டெல்டாவின் கடல் பகுதிகளுக்கு அருகிலும் இந்த தாழ்வு பகுதி வருகிறது.

ஸ்ரீஹரிகோட்டா

இதனால் ஸ்ரீஹரிகோட்டா தொடங்கி டெல்டா பகுதிகள் வரை மொத்த மண்டலமும் மழையை பெறும். அதிலும் ஸ்ரீஹரிகோட்டா சிதம்பரம் இடையே கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 7, 9ல் பெய்தது போல இரண்டு விதமான மழை தமிழ்நாட்டில் பெய்யும் வாய்ப்புள்ளது. கடடந்த 9ம் தேதி சென்னையில் dryline thunderstorm காணப்பட்டது. மாராங்க் டெல்டாவில் தீவிர கனமழை பெய்தது. அதேபோல் மீண்டும் ஏற்படலாம்.

கனமழை

இந்த முறை எந்தெந்த மாவட்டங்களில் இந்த இரண்டு விதமான மழை பெய்யும் என்று உறுதியாக தெரியவில்லை. இப்போது வட தமிழ்நாட்டில் வறண்ட வானிலை காணப்படுகிறது. ஆனால் இதுவே பின்பு வடதமிழ்நாட்டிற்கு சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளது. இப்போதைக்கு தென் தமிழ்நாட்டிலும், ராமநாதபுரம், குமரியிலும் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது என்று சென்னை ரெய்ன்ஸ் கூறியுள்ளது. சென்னை ரெய்ன்ஸ் கணிப்பு படி தாழ்வு பகுதி உருவானால் ஸ்ரீஹரிகோட்டா தொடங்கி டெல்டா பகுதிகள் வரை மொத்த மண்டலமும் மழையை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Rain: The aggressive Bay of Bengal threatens to bowl another Yorker north of the state says Chennai Rains.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-rain-bay-of-bengal-threatens-to-bowl-another-yorker-in-north-the-state-says-chennai-rains-440036.html