சென்னை IIT-யில் உதவிப்பேராசிரியர் பணி… மாதம் ரூ.1,01,500 வரை சம்பளம்..! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • சென்னை IIT-யில் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
  • விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி 2 டிசம்பர் 2021.
  • மாதம் ரூ.1,01,500 வரை சம்பளம் அறிவிப்பு.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெட்ராஸில் (IIT Madras) பிஎச்டி பட்டம் முடித்த விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. IIT மெட்ராஸ் 49 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிகளுக்கு 2 டிசம்பர் 2021-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெளியிட்டுள்ள தகவலின்படி, SC, ST, OBC-NCL, EWS பிரிவினர் மட்டுமே இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

நிறுவனத்தின் பெயர் IIT மெட்ராஸ்.
பதவியின் பெயர் உதவி பேராசிரியர்.
காலியிடங்களின் எண்ணிக்கை 49.
பணியிடம் சென்னை.
விண்ணப்பத்தின் கடைசித் தேதி டிசம்பர் 02, 2021.
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்.
இணையதளம் https://www.iitm.ac.in/

முக்கிய தேதி:

வெளியிட்டுள்ள தகவலின் படி, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2 டிசம்பர் 2021 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதிக்குள், அனைவரும் தங்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி மற்றும் வயது வரம்பு:

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தவிர, விண்ணப்பதாரர்கள் கல்வியில் சில ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பற்றி பேசுகையில், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு பற்றிய கூடுதல் தகவலுக்கு, IIT மெட்ராஸின் facapp.iitm.ac.in இணையதளத்தைப் பார்வையிடலாம். குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடையவர்கள் www.iitm.ac.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

Source: https://tamil.samayam.com/jobs/central-jobs/iit-madras-recruitment-2021-apply-for-49-assistant-professor-posts-on-iitm-ac-in/articleshow/87851518.cms