”இனி மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்கக் கூடாது” – மருந்தகங்களுக்கு சென்னை போலிஸ் முக்கிய ஆணை! – Kalaignar Seithigal

சென்னைச் செய்திகள்

மருந்துக்கடைகளில் போதைத்தரக் கூடிய மருந்து, மாத்திரைகளை சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வாங்கி போதைக்காக பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது காவல் துறை கவனத்திற்கு தெரியவந்தது.

இதனை அடுத்து போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மருந்துக்கடை உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர்கள் கண்ணன் மற்றும் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மருந்துக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். போதை தரக்கூடிய மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்வது குறித்து சில கட்டுப்பாடுகள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/11/24/chennai-police-warns-pharmacies-to-not-sell-illegal-drugs